Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி அணிக்கு தான் மரண அடி.. ஐபிஎல்-இல் இருந்து 20 வெளிநாட்டு வீரர்கள் விலகல்.. முழு பட்டியல்!

பெங்களூர்: 2025 ஐபிஎல் தொடர் ஒரு வார கால இடைநிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் மே 17 முதல் தொடங்க உள்ளது. ஆனால், வெளிநாட்டு வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிகளில் பங்கேற்பார்களா என ஏழு ஐபிஎல் அணிகள் கவலையில் உள்ளன. இதில் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி என கூறப்படுகிறது.

அந்த அணியைச் சேர்ந்த ஆறு வெளிநாட்டு வீரர்கள் இந்தத் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளனர் என்றும், இது பெங்களூரு அணியின் பிளே ஆஃப் வாய்ப்புகளைப் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

IPL 2025 Restart Over 20 Foreign Players Expected to Leave Early for International Duty

முன்னதாக, 2025 ஐபிஎல் தொடர் மே 25 உடன் முடிவடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதன் பிறகு பல்வேறு நாடுகளின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. முக்கியமாக, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 11 முதல் 15 வரை நடைபெற உள்ளது.

இந்தத் தொடருக்காக சுமார் இரண்டு வாரங்கள் வரை இரு அணி வீரர்களும் பயிற்சி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அந்தப் போட்டியில் விளையாட உள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா வீரர்கள் மே மூன்றாவது வாரம் வரை மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மே 29 அன்று தொடங்க உள்ளது. அதில் பங்கேற்க வேண்டிய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் தங்கள் நாடுகளுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு தொடர்களால் மட்டுமே சுமார் 20 வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாட மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, ஐபிஎல் தொடரின் தற்காலிக நிறுத்தத்தால் ஆஸ்திரேலியா சென்ற சில வீரர்கள் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் அதிகமாக பாதிக்கப்பட உள்ளது.

பெங்களூர் அணியில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட், தென்னாப்பிரிக்க வீரர்கள் லுங்கி நிகிடி ஆகியோர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயிற்சிக்காக விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரொமாரியோ ஷெப்பர்டு, இங்கிலாந்து வீரர்கள் பிலிப்ஸ் சால்ட், ஜேக்கப் பெத்தேல் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடரில் விளையாட வேண்டி விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் தென்னாப்பிரிக்க வீரர் மார்க்கோ ஜான்சன் மற்றும் ஆஸ்திரேலியா வீரர் ஜோஸ் இங்கிலீஷ் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க வேண்டியும், மற்றொரு ஆஸ்திரேலியரான மார்க்கஸ் ஸ்டோனிஸ் மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்பாததாலும் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் தென்னாப்பிரிக்க வீரர்கள் ரியான் ரிக்கெல்டன் மற்றும் கார்பன் போஷ் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் தொடருக்கான பயிற்சியில் பங்கேற்க வேண்டி விலக நேரிடலாம் என்ற சந்தேகம் உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷேர்பேன் ரூதர் போர்டு ஆகியோர் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் பங்கேற்க வேண்டி விலகக் கூடும். தென்னாப்பிரிக்க வீரர்கள் காகிசோ ரபாடா மற்றும் ஜெரால்ட் கோட்சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயிற்சியில் பங்கேற்க வேண்டி விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கமின்ஸ் மற்றும் துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணியின் உலக டெஸ்ட் இறுதிப்போட்டி பயிற்சி முகாமில் பங்கேற்க வேண்டி விலகுவார்கள் என கூறப்படுகிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்பாததாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயிற்சியில் பங்கேற்க வேண்டி இருப்பதாலும் விலகி விட்டதாக கூறப்படுகிறது. அந்த அணியில் இடம்பெற்றிருக்கும் தென்னாப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இடம் பெற்றால், விலகுவார் எனக் கூறப்படுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளிடம் பெற்றிருக்கும் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் அன்ரிச் நோர்ஜே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பங்கேற்க வேண்டி விலகுவார் என கூறப்படுகிறது

2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ள வெளிநாட்டு வீரர்கள்:

பெங்களூர் (RCB) அணி:

  • வீரர்: ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயிற்சி

  • வீரர்: லுங்கி நெகிடி (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயிற்சி

  • வீரர்: ரொமாரியோ ஷெப்பர்டு (வெஸ்ட் இண்டீஸ்) - விலகும் காரணம்: இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடர்

  • வீரர்: ஃபிலிப்ஸ் சால்ட் (இங்கிலாந்து) - விலகும் காரணம்: இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடர்

  • வீரர்: ஜேக்கப் பெத்தேல் (இங்கிலாந்து) - விலகும் காரணம்: இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடர்

  • வீரர்: லியாம் லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து) - விலகும் காரணம்: இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடர்

பஞ்சாப் கிங்ஸ் அணி:

  • வீரர்: மார்க்கோ ஜான்சன் (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி (பங்கேற்க வேண்டி)

  • வீரர்: ஜோஸ் இங்கிலிஸ் (ஆஸ்திரேலியா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி (பங்கேற்க வேண்டி)

  • வீரர்: மார்க்கஸ் ஸ்டோனிஸ் (ஆஸ்திரேலியா) - விலகும் காரணம்: மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்பாததால்

மும்பை இந்தியன்ஸ் அணி:

  • வீரர்: ரியான் ரிகெல்டன் (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் தொடருக்கான பயிற்சி

  • வீரர்: கார்பின் போஷ் (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் தொடருக்கான பயிற்சி

குஜராத் டைட்டன்ஸ் அணி:

  • வீரர்: ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) - விலகும் காரணம்: இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் (பங்கேற்க வேண்டி)

  • வீரர்: ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு (வெஸ்ட் இண்டீஸ்) - விலகும் காரணம்: இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் (பங்கேற்க வேண்டி)

  • வீரர்: காகிசோ ரபாடா (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயிற்சி

  • வீரர்: ஜெரால்ட் கோட்சி (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயிற்சி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி:

  • வீரர்: பாட் கமின்ஸ் (ஆஸ்திரேலியா) - விலகும் காரணம்: ஆஸ்திரேலிய அணியின் உலக டெஸ்ட் இறுதிப்போட்டி பயிற்சி முகாம்

  • வீரர்: ட்ராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா) - விலகும் காரணம்: ஆஸ்திரேலிய அணியின் உலக டெஸ்ட் இறுதிப்போட்டி பயிற்சி முகாம்

டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணி:

  • வீரர்: மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - விலகும் காரணம்: மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்பாததாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயிற்சியில் பங்கேற்க வேண்டி இருப்பதாலும்

  • வீரர்: டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இடம் பெற்றால்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி:

  • வீரர்: அன்ரிச் நோர்ஜே (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பங்கேற்க வேண்டி
Story first published: Tuesday, May 13, 2025, 12:43 [IST]
Other articles published on May 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+