For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆர்சிபி-க்கு எதிர்பாராத அடி.. கம்மின்ஸ் படை செய்த சம்பவம்.. சன்ரைசர்ஸ் 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி

லக்னோ: 2025 ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை, அந்த சுற்றுக்கு தகுதி பெறாத சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சந்தித்தது. இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகுந்த முயற்சியுடன் ஆடியது.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். டிராவிஸ் ஹெட் 10 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் 48 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்; அவர் தனது ஆட்டத்தில் 7 ஃபோர்களையும் 5 சிக்ஸர்களையும் விளாசியிருந்தார்.

IPL 2025 Result SRH Beat RCB by 42 Runs in High-Scoring IPL Clash SRH Post 231

நான்காம் வரிசையில் பேட்டிங் செய்த ஹென்ரிச் கிளாசன் 13 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார். அனிக்கட் வர்மா 9 பந்துகளில் 26 ரன்கள் விளாசினார். அபினவ் மனோகர் 11 பந்துகளில் 12 ரன்களும், கேப்டன் பேட் கம்மின்ஸ் 6 பந்துகளில் 13 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து, 232 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு விராட் கோலியும், ஃபில் சால்ட்டும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.

விராட் கோலி 25 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஃபில் சால்ட் 32 பந்துகளில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால், அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களையே எடுத்தனர். தற்காலிக கேப்டன் ஜிதேஷ் சர்மா மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 15 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார். ரொமாரியோ ஷெப்பர்ட் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.

இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. பேட் கம்மின்ஸ் 4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். எஹ்சான் மலிங்கா 4 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

Story first published: Friday, May 23, 2025, 23:55 [IST]
Other articles published on May 23, 2025
English summary
IPL 2025 Result: SRH Beat RCB by 42 Runs in High-Scoring IPL Clash; SRH Post 231
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+