Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 - பிசிசிஐ புதிய விதியால் தோனிக்கு இடமிருக்காது.. எந்த 5 வீரர்களை சிஎஸ்கே தேர்வு செய்யும்?

சென்னை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் மெகா ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணி நிர்வாகமும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்வது என்பது தொடர்பான விதிகளை பிசிசிஐ விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு அணிகளும் ஐந்து வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும், மூன்று ஆர்டிஎம் கார்டு வசதிகளை வழங்கவும் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இதை அனைத்தையும் புறந்தள்ளி உள்ள பிசிசிஐ மொத்தமாகவே ஐந்து வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அது மட்டும் அல்லாமல் ஆர்டிஎம் கார்டு வசதியை பிசிசிஐ ரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ipl 2025 ipl retention ms dhoni csk 2025

இந்த நிலையில் 5 வீரர்கள் மட்டுமே தக்க வைத்துக் கொள்ளும் முறை வந்தால் அதில் எத்தனை வெளிநாட்டு வீரர்கள் என்ற விதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த சூழலில் ஆர் டி எம் கார்டு வசதி இல்லை என்றால் சிஎஸ்கே அணி தோனியை தக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். ஆர் டி எம் கார்டு இருக்கும் நம்பிக்கையில் தங்களுடைய வீரர்களை வேறு எந்த அணியும் தேர்வு செய்தால் ஆர்டிஎம் பயன்படுத்தி மீண்டும் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் சிஎஸ்கே இருந்தது.

தற்போது ஆர் டி எம் இல்லை என்பதால் இந்த ஐந்து வீரர்கள் தான் வேண்டும் என்ற கடினமான முடிவை எடுக்க சிஎஸ்கே தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தோனிக்காக அதில் ஒரு இடம் வழங்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. தோனி அடுத்த சீசனில் விளையாடுவேன் என உறுதி அளித்தால் நிச்சயம் சிஎஸ்கே அணி தோனியை எடுக்கும்.

ஆனால் தோனி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை விட சிஎஸ்கே அணி சிறப்பாக இருக்க வேண்டும் என்றுதான் யோசிப்பார்.
இதனால் rtm இல்லை என்றால் தமக்கு பதில் வேறு ஒரு இளம்வீரரை தேர்வு செய்யுங்கள் என்று தோனி சொல்லவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் தோனியின் சகாப்தம் முடிவுக்கு வர அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த தருணத்தில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்,ஜடேஜா, சிவம் துபே, மதிஷா பதிராணா மற்றும் கான்வே ஆகிய ஐந்து வீரர்களை தேர்வு செய்யக்கூடும். ஒருவேளை தோனி விளையாடுகிறேன் என்று கூறினால் கான்வேவுக்கு பதில் தோனி அந்த இடத்திற்கு வரலாம்.

Story first published: Thursday, September 26, 2024, 7:00 [IST]
Other articles published on Sep 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+