ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் இறுதியில் தொடங்க உள்ள நிலையில் எந்த அணி எந்த வீரர்களை தக்க வைக்க போகிறது என்பது தொடர்பான அறிவிப்பு தீபாவளி அன்று மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், ராஜஸ்தான் கேப்டனாக சஞ்சு சாம்சனும் தொடர்வார்கள் என அறிவிப்பு
டெல்லி கேபிட்டல்ஸ்: அக்சர் பட்டேல் (16 கோடியே 50 லட்சம்), குல்தீப் யாதவ் (13 கோடியே 25 லட்சம்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ( 10 கோடி), ( அபிஷேக் போரெல் (4 கோடி)
பஞ்சாப் கிங்ஸ் : ஷாசாங் சிங் (5.5 கோடி), பிராப்சிம்ரன் சிங் (4 கோடி ரூபாய்)
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (18 கோடி ரூபாய்), ஜெய்ஸ்வால் (18 கோடி ரூபாய்), ரியான் பராக் (14 கோடி ரூபாய்), துரூவ் ஜூரல் (14 கோடி), ஷிம்ரன் ஹெட்மயர் (11 கோடி ), சந்தீப் சர்மா ( 4 கோடி ரூபாய்)
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரான் (21 கோடி ரூபாய்), ரவி பிஸ்னாய் (11 கோடி ரூபாய்), மாயங் யாதவ் (11 கோடி),மோஷின் கான் (4 கோடி ரூபாய்), ஆயுஷ் பதோனி ( 4 கோடி)
குஜராத் டைட்டன்ஸ் : ரஷித் கான் (18 கோடி),சுப்மன் கில் (16.50 கோடி), சாய் சுதர்சன்(8.50 கோடி), ராகுல் தேவாட்டியா (4 கோடி) , ஷாரூக்கான்(4 கோடி)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் : பாட் கம்மின்ஸ் (18 கோடி), அபிஷேக் சர்மா (14 கோடி), நிதிஷ் ரெட்டி (6 கோடி), ஹென்ரிச் கிளாசன்(23 கோடி), டிராவிஸ் ஹெட் (14 கோடி)
கேகேஆர் அணி தரப்பில் ரிங்கு சிங் ரூ.13 கோடி, வருண் சக்கரவர்த்தி ரூ.12 கோடி, சுனில் நரைன் ரூ.12 கோடி, ரஸல் ரூ.12 கோடி, ஹர்சித் ராணா ரூ.4 கோடி, ரமன்தீப் சிங் ரூ.4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளனர்
மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா (18 கோடி), சூர்யகுமார் யாதவ் (16.35 கோடி), ஹர்திக் பாண்டியா (16.35 கோடி), ரோஹித் சர்மா (16.30 கோடி), திலக் வர்மா (8 கோடி) தக்க வைக்கப்பட்டனர்.
ஆர்சிபி அணியின் விராட் கோலி, ரஜத் பட்டிதர் மற்றும் யாஷ் தயாள் ஆகிய மூவரும் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக விராட் கோலிக்கு ரூ.21 கோடி ஒப்பந்தமும், ரஜத் பட்டிதர்-க்கு ரூ.11 கோடி ஒப்பந்தமும், யாஷ் தயாளுக்கு ரூ.5 கோடி ஒப்பந்தமும் அளிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணி ருதுராஜ்க்கு 18 கோடி, பதிரானாவுக்கு 13 கோடி, சிவம் துபே 12 கோடி, ஜடேஜா 18 கோடி, தோனி 4 கோடி
ஐபிஎல் 2025 சீசனில் தோனி சிஎஸ்கேக்க விளையாடுகிறார். அவருக்கு 4 கோடி ரூபாய் வழங்க்ப்படுகிறது
முதல் வீரருக்கு 18 கோடி ரூபாய், 2வது வீரருக்கு 14 கோடி ரூபாய், 3வது வீரருக்கு 11 கோடி ரூபாய், 4வது வீரருக்கு 18 கோடி ரூபாயும், 5வது வீரருக்கு 14 கோடி ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். அதிகபட்சமாக 75 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ய கூடாது. 75 கோடி ரூபாய் தாண்டாத வகையில், வீரர்களுக்கு சம்பளத்தை மாற்றி வழங்கலாம்.
அதிகபட்சம் 2 Uncapped வீரராகவும், 5 சர்வதேச வீரர்களையும் தக்க வைத்து கொள்ளலாம்.
ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைகக முடியும். 6 வீரர்கள் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு வீரர்களாகவும் இருக்கலாம்.