Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

50 வயதாகிவிட்டது, இனி இந்த மாதிரி போட்டிலாம் எனக்கு வேண்டாம்.. சாஹல் குறித்து பாண்டிங் உடைத்த உண்மை

சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணி ஸ்ரேயாஸ் தலைமையில் அபாரமாக விளையாடி வருகிறது. கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 112 ரன்களை இலக்காக நிர்ணயித்து பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

பஞ்சாப் அணி இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றி இரண்டு தோல்வி என தற்போது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து ரிக்கி பாண்டிங் பேசியதை தற்போது பார்க்கலாம்.

PBKS vs KKR

இந்தப் போட்டியை பார்த்தவுடன் என்னுடைய இதயத்துடிப்பு எகிறி விட்டது. எனக்கு வயது 50 ஆகிவிட்டது. இதுபோன்ற போட்டிகள் எல்லாம் இனி எனக்கு வேண்டாம். 112 ரன்கள் என்று இலக்கை தற்காத்துக் கொள்ளும் போது ஒவ்வொரு வீரர்களும் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும். இதை தான் நான் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கும் போது சொன்னேன். இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள் என்று கூறினோம்.

ஆனால் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆடுகளமும் பேட்டிங் செய்ய அவ்வளவு எளிதாக இல்லை. இன்று நீங்கள் பேட்டிங் செய்யும்போதே பார்த்திருக்கலாம் பந்து நன்றாக நின்று வந்தது. சாகல் அபாரமாக பந்து வீசி வருகிறார். சாவலுக்கு தோல்பட்டையில் காயம் ஏற்பட்டு இருந்தது. இதனால் போட்டிக்கு முன்பு அவர் தன்னுடைய உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

இதை அடுத்து நான் அவரை தனியாக அழைத்து சென்று அவர் கண்களை பார்த்து கேட்டேன். நீ நன்றாக இருக்கிறாயா என்று கேட்டேன். அதற்கு நான் நூறு சதவீதம் உடல் தகுதியை எட்டி இருக்கின்றேன். என்னை விளையாட விடுங்கள் என்று சாகல் கூறினார். இன்றைய போட்டியில் நாங்கள் தோற்று இருந்தாலும் கண்டிப்பாக நான் பெருமைப்பட்டு இருப்பேன்.

எங்களுடைய பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. வீரர்களின் சாட் தேர்வு மோசமாக அமைந்திருக்கிறது. எங்கள் வீரர்கள் களத்தில் நல்ல எனர்ஜியுடன் செயல்பட்டார்கள். நாங்கள் இன்றைய ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்தாலும், அது விறுவிறுப்பான போட்டியாக தான் அமைந்திருக்கும். இது நிச்சயம் இந்த சீசனில் மறக்க முடியாத போட்டியாக அமைந்துவிட்டது.

போட்டியை இதுபோல்தான் கடைசி வரை கொண்டு சென்று வெற்றி பெற வேண்டும். இந்த இலக்கை கண்டிப்பாக நாங்கள் தற்காத்து இருக்க மாட்டோம் என்று அனைவரும் நினைத்திருப்பார்கள். எங்கள் அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள். இன்றைய போட்டி அபாரமாக இருந்தது. நான் ஐபிஎல் போட்டிகளில் பல போட்டிகளுக்கு பயிற்சியாளராக இருந்திருக்கிறேன். ஆனால் இதுதான் சிறந்த வெற்றியாக நான் கருதுகிறேன் என்று பாண்டிங் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, April 15, 2025, 23:37 [IST]
Other articles published on Apr 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+