Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ஆர்சிபியை பொளந்த ரிஷப் பண்ட்.. கேலிக்கு சதம் விளாசி பதிலடி.. பல்டி அடித்து கொண்டாட்டம்

லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கடுமையாக தடுமாறினார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை பந்த் பெற்றார். 12 இன்னிங்ஸ் விளையாடிய பண்ட் வெறும் 151 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இதில் அவருடைய சராசரி 13 என்ற அளவில் இருந்தது. ஸ்டிரைக் ரேட் 107 என்று அளவில் இருந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் பண்டை கடுமையாக விமர்சித்தனர். மேலும் பண்டை அணியை விட்டு நீக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி இருந்தனர். இந்த சூழலில் தன்னுடைய விமர்சனங்களுக்கு கடைசி ஆட்டத்தில் பேட் மூலம் பந்த் பதிலடித்து கொடுத்து இருக்கிறார்.

லக்னோவில் நடைபெற்ற கடைசி லீக்காட்டத்தில் ஆர்சிபி லக்னோ அணிகள் பல பரிட்சை நடத்துகிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க வீரர் மேத்தீவ்14 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார்.

இந்த சீசன் முழுவதும் சரியாக விளையாடிய பண்ட், இன்று முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டி ரசிகர்களுக்கு விருந்தளித்தார். ஒரு பக்கம் மிச்சல் மார்ஸ் ஐந்து சிக்சர், நான்கு பவுண்டரி என 37 பந்துகளில் 67 ரன்கள் விளாச பண்டை தன்னுடைய பழைய அதிரடி காட்டினார். மூன்று சிக்சர், ஐந்து பௌண்டரி என 29 பந்துகள் எல்லாம் அரை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் பந்த், ஆர்சிபி பந்து வீச்சை மைதானத்தில் நான்கு பக்கமும் அடித்து பொளந்தார்.

ஒரு கட்டத்தில் பண்டை கட்டுப்படுத்த முடியாமல் ஆர் சி பி வீரர்கள் தடுமாறினர். தன்னுடைய சிக்னேச்சர் ஷாட்களை பண்ட் ஆட தான் பார்ம்க்கு திரும்பி வந்துவிட்டேன் என்பதை காட்டியது. தொடர்ந்து அதிரடி காட்டிய பண்ட் 54 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 61 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்தார். இதில் 11 பௌண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும். பண்ட் ஸ்ட்ரைக் ரேட் 193 என்ற அளவில் இருந்தது. இறுதியில் நிக்கோலஸ் பூரான் 13 ரன்கள் எடுக்க லக்னோ அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது.

Story first published: Tuesday, May 27, 2025, 21:52 [IST]
Other articles published on May 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+