மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்குகிறது.இதற்கான ஏலம் அடுத்த மாதம் 24 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்பு எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறது என்பதை அறிவிக்கிறது.
இதில் டெல்லி அணி ரிஷப் பந்தை தக்க வைக்கவில்லை என்ற செய்திகள் வெளியாகி உள்ளது. டெல்லி அணியில் நிர்வாகம் மாறி இருப்பதால் ரிஷப் பன்ட் வேறு அணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.தோனிக்கு பிறகு அந்த இடத்திற்கு ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் வீரர் தேர்வு செய்ய வேண்டும். இதனால் அந்த இடத்திற்கு பண்ட் வரப்போகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
தமக்குப் பின்பு ஒரு அதிரடி வீரர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருக்க வேண்டும் என்பதில் தோனி உறுதியாக இருக்கிறார்.
இதற்காக பண்டை 25 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்க தோனி அறிவுறுத்தி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ரிஷப் பன்ட் அணிக்கு வந்தால் அப்போது ருதுராஜ் கேப்டன் பதவியில் இருந்து இறங்க போகிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த சூழலில் ரிஷப் பண்டை, பஞ்சாப் அணியும் ஆர்சிபி அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டி வருகிறது. டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் தற்போது பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.இதனால் ரிக்கி பாண்டிங் அறிவுறுத்தலின்படி ரிஷப் பன்ட் பஞ்சாப் அணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம், ஆர் சி பி அணிக்கும் கேப்டன் இல்லை என்பதால் ரிஷப் பண்டை, அவர்கள் ஏலத்தில் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஏலத்தில் பண்ட், அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற பெயரை பெற வாய்ப்பு இருக்கிறது. இதனால் பண்ட்க்கு ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 கோடி ரூபாய் வரை ஏலத்தில் செலவு செய்யும் என எதிர்பார்க்கலாம்.