Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025-வாய் விட்டு அடி வாங்கிய ரிஷப் பண்ட்.. பஞ்சாப் அணியை கிண்டல் செய்ததற்கு பதிலடி தந்த ஸ்ரேயாஸ்

லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற்ற போது ரிஷப் பண்ட் தான் அதிக விலைக்கு சென்றார். ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார். 26 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

ரிஷப் பண்ட் வெற்றிகரமான கேப்டனாக இருப்பார் என லக்னோ அணி நினைத்தது. ஏனென்றால் டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ற பேட்ஸ்மேன் ஆக ரிஷப் பண்ட் வழங்கினார். ஆனால் ரிஷப் பண்ட்க்கு தற்போது போதாத காலமாக மாறிவிட்டது. ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு எந்தவித கிரிக்கெட் போட்டிகளில் ரிஷப் பண்ட் சேர்க்கப்படவில்லை.

Rishabh Pant

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக தான் ரிஷப் பண்ட் விளையாடினார். இதில் டக் அவுட், இரண்டு ரன்கள் என பண்ட் பேட்டிங்கின் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் மறுபுறம் ஸ்ரேயாஸ் அபாரமாக விளையாடி 97 ரன்கள், 52 ரன்கள் என அசத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையின் கீழ் பஞ்சாப் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ரிஷப் பண்ட் பேசிய வீடியோ ஒன்று தற்போது மீண்டும் வைரல் ஆகி வருகிறது. ஐபிஎல் தொடரில் பொதுவாக பஞ்சாப் அணியை மொக்கை அணியாக பலரும் கருதுவார்கள். பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் சri கிடையாது என்றும் அந்த அணி நிர்வாகமும் மோசமாக இருக்கிறது என்று கிரிக்கெட் வீரர்களிடையே ஒரு பேச்சு இருக்கிறது.

இந்த சூழலில் மெகா எலத்திற்கு பிறகு பேசிய ரிஷப் பண்ட், "ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணியிடமும் லக்னோ அணியிடமும் தான் அதிக பணம் இருந்தது. என்னை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்து விடக்கூடாது என்று நான் டென்ஷனாக இருந்தேன். நல்ல வேளையாக லக்னோ அணி என்னை எடுத்து விட்டார்கள் என்று பண்ட் கூறியிருந்தார்"

இந்த சூழலில் தான் தற்போது பஞ்சாப் அணி லக்னோவை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பஞ்சாப் அணியின் சமூக வலைத்தள பக்கத்தில் இப்போது டென்ஷன் எதுவும் படவேண்டாம் பண்ட் என்று பதிவிட்டு இருக்கிறார்கள். பஞ்சாப் அணியை மோசமாக விமர்சித்த நிலையில் தற்போது அந்த அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் பண்ட் உடைய அணி தற்போது தடுமாறி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, April 2, 2025, 14:54 [IST]
Other articles published on Apr 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+