Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெரிய மனுசன் யா நீ! தோல்வியின் விழும்பில் இருந்தும், நேர்மையாக நடந்த Pant.. கட்டி பிடித்த RCB வீரர்

லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ரிஷப் பந்த் தோல்வியின் விளிம்பில் இருந்தும் நேர்மையாக நடந்து கொண்ட விதம் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. லக்னோ மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் எழுபதாவது லீக் ஆட்டம் இன்று லக்னோவில் நடைபெற்றது.

இந்த போட்டி லக்னோவுக்கு சமிபிரதாய ஆட்டமாக இருந்தாலும் ஆர்சிபிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனென்றால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆர் சி பி அணி முதல் குவாலிபயர் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

Rishabh Pant

இந்த நிலையில் ஆர் சி பி அணியால் முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட பந்த் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இதனால் லக்னோ அணி 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர் சி பி அணி விளையாடியது. விராட் கோலி அபாரமாக விளையாடி அரை சதம் அடித்த ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் வெற்றிக்கு 24 பந்துகளில் 39 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 17வது ஓவரை டிக்வீஸ் ரதி முதல் பந்தில் ஜித்தேஷ் சர்மா அவுட்டானார்.

ஆனால் இது பேக் புட் நோபால் என நடுவரால் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கிடைத்த ப்ரீ ஹிட்டை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட ஜித்தேஷ் சர்மா சிக்ஸ் அடித்தார். இதனால் கடுப்பான திக்வேஷ் ரதி, அவரை ஆட்டம் இழக்க வைக்க வேண்டும் என குறுக்கு வழியை பயன்படுத்தினார். பந்தை வீசுவது போல் வந்து திடீரென்று அவர் நிறுத்திவிட்டார். அப்போது ஜித்தேஷ் சர்மா கிரீசை விட்டு வெளியே சென்றவுடன் அதனை பயன்படுத்திக் கொண்டு திக்விஷ் ரதி மான்கேட் ரன் அவுட் செய்து நடுவரிடம் அவுட் கேட்டார்.

இதனை அடுத்து மூன்றாம் நடுவர் ரிப்ளே செய்து பார்த்ததில், இது அவுட் என தெரிய வந்தது. எனினும் கடைசி நிமிடத்தில் ரிஷப் பன்ட் நாங்கள் இந்த அப்பீலை வாபஸ் வாங்குகிறோம் எனக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இதை அடுத்து நடுவர், இதற்கு நாட் அவுட் என வழங்கினார். உடனே இதனை கொஞ்சமும் நம்பாத ஜித்தேஷ் சர்மா பண்டை கட்டிப்பிடித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. திக்வேஷ் செய்தது விதிகளுக்கு உட்பட்டது தான் என்றாலும் கிரிக்கெட் நன் விளையாட்டு முறைப்படி இது மனசாட்சிக்கு விரோதமான செயலாக பார்க்கப்படுகிறது. இதனால் தான் தோல்வியை தழுவும் நிலையில் இருந்தும் அப்பிலை பண்ட் வாபஸ் வாங்கினார். இதனால் ஜித்தேஷ் 33 பந்தில் 85 ரன்கள் விளாசினார்.

Story first published: Tuesday, May 27, 2025, 23:56 [IST]
Other articles published on May 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+