Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: அந்த 7 ஓவர்கள்.. வருண் - மொயீன் பவுலிங்கில் ஆடிப்போன ராஜஸ்தான் ராயல்ஸ்.. என்ன நடந்தது?

கவுஹாத்தி: 2025 ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டியில், வருண் சக்ரவர்த்தி மற்றும் மொயின் அலி ஆகியோர் இணைந்து சிறப்பாக பந்துவீசி ராஜஸ்தான் அணியை கட்டுப்படுத்தினர். அவர்கக் இணைந்து வீசிய 7 ஓவர்களில் ராஜஸ்தான் அணி ரன் குவிக்க முடியாமல் 4 விக்கெட்களையும் இழந்தது.

இந்தப் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஆறு ஓவர்களில், கொல்கத்தா அணியின் ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா மற்றும் வைபவ் அரோரா ஆகியோர் பந்துவீசினர். அந்த ஆறு ஓவர்களில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் சேர்த்தது.

IPL 2025 RR vs KKR Varun Chakravarthy and Moeen Ali were the turning point for KKR

அடுத்து, ஏழாவது ஓவர் முதல் மொயின் அலி மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இணைந்து பந்துவீசத் தொடங்கினர். மொயின் அலி, தனது நான்கு ஓவர்களையும் வரிசையாக வீசி முடித்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஏழு ஓவர்களை வீசினர்.

ஆட்டத்தின் 13-வது ஓவர் முடிவில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. மொயின் அலி தனது நான்கு ஓவர்களையும் வீசி முடித்திருந்தார். அவர் நான்கு ஓவர்களில் 23 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். வருண் சக்ரவர்த்தி தனது முதல் மூன்று ஓவர்கள் முடிவில் 15 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அவர் முடிவில், நான்கு ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இவர்கள் இருவரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால், மொத்தமாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிலை குலைந்தது. அந்த அணி அதிரடியாக ஆடி வந்த நிலையில், இவர்கள் இருவரும் பந்துவீசி முடிக்கும் வரை, அந்த அணியால் அதிவேகத்தில் ரன் குவிக்க முடியவில்லை. பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடிக்க முடியவில்லை.

அதன் பின், கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீச வந்த பின்னரே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீண்டும் ரன் குவிப்பில் ஈடுபட்டது. 20 ஓவர்கள் முடிவில், ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. வருண் சக்ரவர்த்தி மற்றும் மொயின் அலி ஆகியோர், ராஜஸ்தான் அணியை கட்டுப்படுத்த பெரிதும் உதவினர். பின்னர் கொல்கத்தா அணி 152 ரன்கள் என்ற இலக்கை 17.3 ஓவர்களில் எட்டியது. குவின்டன் டி காக் 97 ரன்கள் குவித்து இருந்தார்.

செய்தி சுருக்கம்:

  • ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டி.
  • வருண் சக்ரவர்த்தி மற்றும் மொயின் அலி ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு.
  • ராஜஸ்தான் அணியை கட்டுப்படுத்திய பந்துவீச்சாளர்கள்.
  • ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தது.
Story first published: Wednesday, March 26, 2025, 23:29 [IST]
Other articles published on Mar 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+