மெகா ரெக்கார்டு.. வாயை பிளக்க வைத்த சாய் சுதர்சன்.. ஒரே ஐபிஎல் தொடரில் பிரம்மாண்ட மைல்கல் சாதனை
முல்லான்பூர்: 2025 ஐபிஎல் தொடரின் பிளேஆஃப் சுற்றில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியடைந்தாலும், அந்த அணியின் துவக்க வீரரான சாய் சுதர்சன் தனி ஆளாகப் போராடி இமாலய இலக்கை எட்டினார்.
இந்தப் போட்டியில் அவர் அபாரமாக ஆடி 49 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி இந்தப் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையிலும், சாய் சுதர்சனின் ஆட்டம் மட்டுமே அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தது. அவர் தன்னால் முடிந்தவரை போராடினார்; அவர் ஆட்டமிழந்தவுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியை நோக்கிச் சென்றது.

இந்தப் போட்டியில் 80 ரன்கள் அடித்ததன் மூலம் சாய் சுதர்சன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக 15 இன்னிங்ஸ்களில் 759 ரன்களைச் சேர்த்திருக்கிறார். இதன் மூலம் இந்த ஆண்டு 700 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைச் செய்திருக்கிறார்.
மேலும், தற்போது அவரே இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த வீரராகவும் இருக்கிறார். அவர் ஒரு சதம் மற்றும் ஆறு அரை சதங்களை எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 54.21 என்பதாகவும், ஸ்ட்ரைக் ரேட் 156.17 என்பதாகவும் உள்ளது.
மேலும், ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஐபிஎல் சீசனில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறார் சாய் சுதர்சன். அந்தப் பட்டியல் பின்வருமாறு:
-
விராட் கோலி (2016) - 973 ரன்கள்
-
சுப்மன் கில் (2023) - 890 ரன்கள்
-
ஜோஸ் பட்லர் (2022) - 863 ரன்கள்
-
டேவிட் வார்னர் (2016) - 848 ரன்கள்
-
சாய் சுதர்சன் (2025) - 759 ரன்கள் (தற்போது)
இந்த வரலாற்றுப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் தற்போது சாய் சுதர்சன் இடம்பிடித்து, தனது திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.


Click it and Unblock the Notifications