Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கழற்றிவிட்ட ராஜஸ்தான் அணி.. கேகேஆர் அணிக்கு செல்லும் சங்கக்காரா.. கம்பீர் இடத்தை நிரப்புவாரா?

மும்பை: ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றி வந்த குமார் சங்கக்காராவின் இடத்தை ராகுல் டிராவிட் நிரப்பவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக ஷாருக் கானின் கேகேஆர் அணி ஆலோசகர் பதவிக்கு சங்கக்காரா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி சாம்பியன் பட்டம் வென்று 3வது முறையாக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. இதற்கு கேகேஆர் அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் முக்கிய காரணமாக அமைந்தார். ஆனால் கேகேஆர் அணி கோப்பையை வென்ற பின், இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை கவுதம் கம்பீர் ஏற்றுக் கொண்டார்.

ipl 2025 rahul dravid sangakkara

கம்பீர் வந்ததோடு மட்டுமல்லாமல் கேகேஆர் அணியின் துணைப் பயிற்சியாளரான அபிஷேக் நாயர், ஃபீல்டிங் பயிற்சியாளர் ரியான் டென்டஸ்காட்டே உள்ளிட்டோரையும் இந்திய அணிக்கு அழைத்து சென்றார். இதனால் கேகேஆர் அணியில் தற்போது தலைமைப் பயிற்சியாளர் சந்திரகாண்ட் பண்டிட் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் இருவரும் மட்டுமே இருக்கின்றனர்.

இதனால் மெகா ஏலத்திற்கு முன்பாக கேகேஆர் அணியின் பயிற்சியாளர்கள், ஆலோசகரை நியமிக்க அந்த அணியின் உரிமையாளர் ஷாருக் கான் தீவிரமாக இருக்கிறார். இதனிடையே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை ஒப்பந்தம் செய்திருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 பயிற்சியாளராக சங்கக்காரா செல்வார் என்று பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி நேரத்தில் பிரண்டன் மெக்கல்லத்தையே இங்கிலாந்து அணியின் ஒயிட் பால் பயிற்சியாளராக தேர்வு செய்துள்ளனர். இதன் காரணமாக பார்ல் ராயல்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகளுடன் சங்கக்காராவை தொடர வைக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் சங்கக்காராவுக்கு பல்வேறு அணிகளில் இருந்தும் சில வாய்ப்புகள் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் 3 ஆண்டுகள் பயணித்துள்ள சங்கக்காரா, அந்த அணியை உச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். 2022ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டி வரையும், 2023ஆம் ஆண்டு 5வது இடத்திலும், கடந்த ஆண்டு குவாலிஃபையர் 2வது போட்டி வரையும் முன்னேறியது. இதனால் சங்கக்காரா ஒரு பயிற்சியாளராக சிறப்பாக செயல்படுவதாக பாராட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் சங்கக்காராவை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கவுதம் கம்பீர் விட்டுச் சென்ற பணியான கேகேஆர் அணியின் ஆலோசகர் பணிக்கு சங்கக்காராவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டிய பின்னர், அதிகாரப்பூர்வமாக கேகேஆர் அணி நிர்வாகம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, September 5, 2024, 21:59 [IST]
Other articles published on Sep 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+