Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: இதுக்கு தான் காசு வாங்குகிறோம்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய ஷர்துல் தாக்கூர் பேச்சு

லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியின் அருகே வந்த நிலையில் லக்னோ அணியின் சார்பாக சர்துல் தாக்கூர் வீசிய ஒரு ஓவர் ஆட்டத்தை தலைகீழாக மாற்றியது. மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிக்கு 12 பந்து 29 ரன்கள் தேவைப்பட்டது.

19 ஓவர் வீசிய சர்துல் தாக்கூர் அபாரமாக செயல்பட்டு வெறும் ஏழு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதில் ஒரு பவுண்டரி கூட செல்லவில்லை. இதுதான் போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

Shardul Thakur

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்துல் தாக்கூர், 19 ஆவது ஓவர் வீசும் போது இல்லை கடைசி ஓவர் வீசும் போது எப்போதுமே பவுலர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும். ஆவேஸ் கானும் நல்ல முறையில் பந்து வீசினார். இதை செய்வதற்காகத்தான் நாங்கள் சம்பளம் வாங்குகின்றோம். இன்று வெற்றி பெற்ற அணியாக இருப்பதில் மகிழ்ச்சி அளிக்கின்றது. எங்களுடைய திட்டத்தை நாங்கள் சரியாக களத்தில் செயல்படுத்தினோம்.

இந்த ஆடுகளம் கொஞ்சம் நெருக்கடியை கொடுத்தது. சில சமயம் பந்தை மெதுவாக வீசியதால் பலன் கொடுத்தது. சில சமயம் மெதுவான பந்துகளில் பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடித்தார்கள். யாக்கர் பந்துகளை வீசும் போது பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் சிரமப்பட்டார்கள். நாங்கள் மும்பை அணி முதல் பாதியில் பந்து வீசும் போது ஆடுகளம் எப்படி செயல்பட்டது என்பதை கண்காணித்தோம்.

எனினும் நாங்கள் பந்து வீசும் போது ஆடுகளம் கொஞ்சம் மாறி பேட்டர்ஸ்க்கு சாதகமாக இருந்தது. இதுபோல் சூழலில் பவுலர்கள் தங்களது லைனை சரியாக மாற்றி வீச வேண்டும். டிக்வேஸ் ரதி அபாரமாக செயல்பட்டு வருகிறார். இது போன்ற வீரர்கள் எப்போதுமே தங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பயப்பட மாட்டார்கள்.

இது ரதிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கின்றது. பயிற்சி ஆட்டத்தில் அவர் எப்படி பந்து வீசினார். அவருடைய பலம் என்ன என்பதை எல்லாம் நாங்கள் பார்த்தோம். நிச்சயமாக ஐபிஎல் தொடரில் ஒரு ஆச்சரியத்தை கொடுக்கக் கூடிய வீரராக டிக்வேஸ் ரதி இருக்கின்றார். செம்மண் கலந்த ஆடுகளத்தில் பேட்டர்ஸ் பவுன்ஸை நம்பி விளையாடுவார்கள்.
ஆனால் களிமண் கலந்த ஆடுகளத்தில் உங்களுக்கு உண்மையான திறன் இருந்தால்தான் ரன் சேர்க்க முடியும் என்று சர்துல் தாக்கூர் கூறினார்.

Story first published: Saturday, April 5, 2025, 7:00 [IST]
Other articles published on Apr 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+