Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பஹல்காம் தாக்குதல் எதிரொலி!பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை..மத்திய அரசு அதிரடி

மும்பை: இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஏற்கனவே பல அரசியல் பிரச்சனைகள் நிலவி வந்த நிலையில் காஷ்மீரில் பஹல்கம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

இது இரு நாட்டுக்கு மேலான விரிசலை மேலும் அதிகரித்து இருக்கிறது. தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டியுள்ள மத்திய அரசு தற்போது பாகிஸ்தான் மீது பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதிநீர் பங்கிட்டு ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி இருக்கிறது.

Shoaib Akthar

மேலும் இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஏற்கனவே இந்தியாவும் பாகிஸ்தானும் இரு தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடாமல் இருந்தார்கள். பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மத்திய அரசு அனுமதி அளிக்காத நிலையில், அண்மையில் நடைபெற்ற சாம்பியன் டிராபி தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்றது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சோயிப் அக்தர், பாசித் அலி, லத்தீப் ஆகியோரின் you tube சேனலுக்கு மத்திய அரசு தடை விதித்து இருக்கிறது. இந்த மூன்று கிரிக்கெட் வீரர்களின் சேனலும் இந்தியாவில் இனி எடுக்காது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. ராணுவத்துக்கு எதிராக செய்திகள் வெளியிட்டதாக கூறி பாகிஸ்தான் ஊடகங்களின் யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்த நிலையில் தற்போது சோயிப் அக்தர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் you tube சேனலுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.

சோயிப் அக்தருக்கு இந்தியா அளவில் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொண்டு அவர் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக தினமும் தனது கருத்தை வீடியோவாக வெளியிட்டு வந்தார். தற்போது இந்த சேனல் தடை விதிக்கப்பட்டிருப்பது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஷாகித் ஆப்ரிடி, டேனிஸ் கனரியா மற்றும் சல்மான் பட் போன்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் you tube சேனல் தொடர்ந்து இயங்குகிறது. இதனால் இந்த மூன்று வீரர்களின் சேனல் எதற்காக தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் விவாதித்து வருகின்றனர்.

Story first published: Monday, April 28, 2025, 18:26 [IST]
Other articles published on Apr 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+