Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- காவ்யா மாறனுக்கு லவ் லெட்டர் எழுதி இருப்பானோ? களத்தில் ஸ்ரேயாஸ் செய்த காரியம்

ஐதராபாத்: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி விளையாடுகிறது என்றால் பலரும் போட்டியை பார்க்கிறார்களோ இல்லையோ அந்த அணியின் உரிமையாளரான காவியா மாறனை பார்ப்பதற்காகவே தொலைக்காட்சி முன் அமர்ந்து விடுவார்கள்.

ஏனென்றால் காவ்யா மாறன் செய்யும் ஒவ்வொரு ரியாக்சனும் க்யூட்டாக இருக்கும். அந்த அணி தோற்றால் வடிவேலு போல் சோகமாக அமர்ந்திருப்பதும் அணி வெற்றியை நோக்கி சென்றால் குழந்தை போல துள்ளி குதிப்பதும் என காவியா மாறன் அவ்வளவு சேட்டைகளை செய்வார்.

SRH vs PBKS

தான் ஒரு அணி உரிமையாளர் என்பதை மறந்து சாதாரண ரசிகர் போல் காவ்யா மாறன் செய்யும் ஒவ்வொரு ரியாக்ஷனும் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகும். இந்த நிலையில் காவியா மாறன் தொடர்பாக பல கிசுகிசுக்களும் வரும். மேலும் பெரும் பணக்காரரின் மகளான காவியா மாறன் யாரை காதலிக்கிறார் என்ற பேச்சும் அவ்வப்போது அடிபடும்.

இந்த நிலையில் நேற்று சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர இளம் வீரரான அபிஷேக் ஷர்மா, 55 பந்துகளில் 141 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்சர்களும், 14 பவுண்டரிகளும் அடங்கும். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 256 என்ற அளவில் இருந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி நிர்ணயித்த 246 ரன்கள் என்று இலக்கை ஒன்பது பந்துகள் எஞ்சிய நிலையில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்கு முன்பு வரை சன்ரைசர்ஸ் அணி ஐந்து போட்டியில் விளையாடி நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி ஒரு வெற்றியை மட்டுமே பெற்று இருந்தது. இதனால் காவியா மாறன் தொடர்ந்து சோகத்திலிருந்தார். இந்த சூழலில் அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் காவ்யா மாறன் கொண்டாடிக் கொண்டிருந்தார்.

அபிஷேக் ஷர்மா 40 பந்துகளின் சதம் விளாசிய உடன் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து ரசிகர்கள் முன் காட்டினார். முதலில் அதில் என்ன எழுதி இருந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை. முதலில் பலரும் காவ்யா மாறனுக்கு அபிஷேக் ஷர்மா ப்ரொபோஸ் செய்கிறாரா என்று யோசித்தனர்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயரும் ஓடி சென்று அபிஷேக் சர்மாவிடம் இருந்த பேப்பரை வாங்கி படித்தார். இதனை குறிப்பிட்ட ரசிகர்கள் காவியா மாறனுக்கு லவ் ப்ரொபோஸ் செய்திருப்பாரோ என்ற சந்தேகத்தில் தான் ஸ்ரேயாஸ் இவ்வாறு செய்து இருக்கலாம் என்று கிண்டல் செய்து வருகின்றனர். ஆனால் அவர் இந்த இன்னிங்சில் ஆரஞ்சு ஆர்மி ரசிகர்களுக்காக என்று குறிப்பிட்டிருந்தார்.

Story first published: Sunday, April 13, 2025, 14:11 [IST]
Other articles published on Apr 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+