Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025.. என்ன தேஜாவுவா இது? ஏற்கனவே டி20 பைனலில் மோதிய ஸ்ரேயாஸ், ரஜத்.. யார் வென்றது தெரியுமா?

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணியும் பஞ்சாப் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற போகிறது என இந்த தொடர் தொடங்கும் முன்பு யாராவது சொன்னார்கள் என்றால் அதனை ரசிகர்கள் நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் தற்போது அதுதான் உண்மையாகி இருக்கிறது.

ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்த சூழலில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபையர் 2 போட்டியில் வீழ்த்தி பஞ்சாப் அணி தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

Shreyas Iyer Rajat patidar

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு புதிய அணி கோப்பையை வெல்லப்போவது உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர், ஆர் சி பி கேப்டனான ரஜத் பட்டிதார், ஏற்கனவே ஒரு டி20 தொடரில் இறுதிப்போட்டியில் கேப்டனாக மோதி இருக்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம், அது தான் உண்மை, ஐபிஎல் க்கு பிறகு பிசிசிஐ நடக்கும் பிரதான t20 கிரிக்கெட் தொடராக கருதப்படுவது சையது முஸ்தாக் அலி தொடர் தான். கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி இந்த தொடரில் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் தலைமையிலான மும்பை அணியும்,ரஜத் பட்டிதார் தலைமையிலான மத்திய பிரதேச அணியும் பலப் பரிட்சை நடத்தியது.

இதில் டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் ஐயர், முதலில் ரஜத் பட்டிதார் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இதில் ரஜத் பட்டிதார் 40 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். இதில் ஆறு பவுண்டரி, ஆறு சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் மத்திய பிரதேச அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து ஸ்ரேயாஸ் தலைமையிலான மும்பை அணி 17.5 ஓவர் எல்லாம் இந்த இலக்கை எட்டி சாம்பியன் பட்டத்தை வென்றது. எனவே ஏற்கனவே இரு கேப்டன்களும் மோதினர். இதில் ஸ்ரேயாஸ் வெற்றியை பெற்றிருக்கிறார். ஆனால் ஸ்ரேயாஸ் அணியில் சூரியகுமார், ரஹானே போன்ற ஸ்டார் வீரர்கள் இருந்தனர். தற்போது மீண்டும் ஆறு மாதத்திற்குப் பின் இரு கேப்டன்களும் ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் மோதி இருக்கிறார்கள்.

Story first published: Monday, June 2, 2025, 19:07 [IST]
Other articles published on Jun 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+