53.75 கோடி.. உனக்கும் ஜாலி எனக்கும் ஜாலி.. இப்படி ஒரு ஐபிஎல் ரெக்கார்டை பார்த்ததே இல்லையே!
லக்னோ: 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டி லக்னோவில் நடைபெற்றது. இந்த இரண்டு அணிகளும் இந்த ஆண்டு முதன்முறையாக ஐபிஎல் தொடரில் நேருக்கு நேர் மோதின. இதில் வியக்கத்தக்க சாதனை ஒன்று படைக்கப்பட்டது.
2025 ஐபிஎல் ஏலத்தில் மிக அதிக தொகைக்கு வாங்கப்பட்ட இரண்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். ஐபிஎல் வரலாற்றில் 25 கோடிக்கும் அதிகமான தொகைக்கு வாங்கப்பட்ட இரண்டு வீரர்கள் ஒன்றாக சேர்ந்து விளையாடிய சாதனை படைக்கப்பட்டது. அந்த இருவரில் ஒருவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட். அவர் 27 கோடி ரூபாய்க்கு 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கப்பட்டார்.

மற்றொருவர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர். அவர் 26.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து மொத்தம் அதிக சம்பளம் பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து விளையாடினர். இதன் மூலம் ஒரே ஐபிஎல் போட்டியில் அதிக சம்பளம் பெறும் இரண்டு வீரர்கள் இணைந்து விளையாடிய சாதனை படைக்கப்பட்டது.
இதற்கு முந்தைய ஐபிஎல் தொடர்களில் அதிகபட்சமாக 24.75 கோடி என்ற சம்பளமே இருந்தது. 2024 ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து 24.75 கோடி சம்பளம் பெற்றார். அந்த சாதனை 2025 ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பண்ட்டால் முறியடிக்கப்பட்டது.
அதற்கு அடுத்த சில நிமிடங்களில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் அந்த சாதனையை முறியடித்தார். இந்த இரண்டு அதிக சம்பளம் வாங்கும் கேப்டன்களும் மோதிய இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. அதிக சம்பளம் வாங்கினாலும் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடவில்லை. இந்த போட்டியில் அவர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்து இருபது ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடி ஆட்டம் ஆடி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் பிரப்சிம்ரன் சிங் 34 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடி 30 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். நெஹால் வதேரா 25 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்திருந்தார்.


Click it and Unblock the Notifications