Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: பதற்றம் அடைந்த சாஹல்.. ஸ்ரேயாஸ் தந்த அட்வைஸ்.. ஆட்டத்தையே மாற்றிய நிகழ்வு

சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்படும் ஸ்கோரை கூட சேசிங் செய்யும் அணி இரண்டு ஓவர்கள், மூன்று ஓவர்கள் எஞ்சிய நிலையில் வெற்றியை பெறுகிறது. இந்த சூழலில் வெறும் 112 ரன்கள் என்று இலக்கை பஞ்சாப் அணி நிர்ணயித்த போது பலரும் இந்த போட்டி 10 ஓவரிலே முடிந்து விடும் என்று எதிர்பார்த்தார்கள்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு டிவிஸ்டை பஞ்சாப் அணி வைத்தது. குறிப்பாக இந்திய அணியில் சேர்க்கப்படாத சாஹல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சாஹலின் ஸ்பெல் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றியது.

Shreyas Iyer

ரஹானே, ரகுவன்சி, ரிங்கு சிங் மற்றும் ரமந்தீப் சிங் என நான்கு அதிரடி வீரர்கள் விக்கெட்டையும் சாஹல்தான் வீழ்த்தினார். இந்த நிலையில் பொதுவாக சுழற் பந்துவீச்சாளர்கள் பந்தை வீரர்கள் ஏதுவாக சிக்ஸர் அடிப்பார்கள். குறிப்பாக சாகலின் கடைசி ஓவரில் மட்டும் 16 ரன்கள் சென்றது. இந்த நிலையில் 112 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்யும் போது சுழற் பந்துவீச்சாளர்கள் ஓவரில் எதிரணி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆட முயற்சி செய்வார்கள்.

இதனால் சாஹல் இந்த போட்டியில் கொஞ்சம் பதற்றத்துடன் காணப்பட்டிருக்கிறார். இதனை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் அவர்களிடம் சென்று பதற்றமே அடைய வேண்டாம் பந்து ஆடுகளத்தில் பட்டு நன்றாக திரும்புகிறது. இது உனக்கு ஏற்ற ஆடுகளம். நன்றாக மூச்சை இழுத்து விடு. உனது மூச்சில் கவனம் செலுத்து. ஒவ்வொரு பந்து போடும்போதும் மூச்சை நன்றாக இழுத்து விடு.

இதன் மூலம் நீ அமைதியாக ஆவாய். உன்னால் விக்கெட்டுகளை எளிதில் எடுக்க முடியும் என்று ஸ்ரேயாஸ் கூறியிருக்கிறார். இதன்படி சாஹலும் செய்து, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்று இருக்கிறார். சாஹலுக்கு இந்த அறிவுரை வழங்கிய ஸ்ரேயாஸ் ஐயரை பலரும் பாராட்டி வருகிறார்கள். தோனி எவ்வாறு குறைந்த இலக்குகளை கூட வெற்றிகரமாக தனது கேப்டன்சி மூலம் தற்காத்து வெற்றி பெறுவாரோ அதேபோல் ஸ்ரேயாஸ் செய்திருப்பதாக பலரும் பாராட்டு வருகின்றனர்.

Story first published: Wednesday, April 16, 2025, 14:33 [IST]
Other articles published on Apr 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+