Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ஆடுகளம் மீது பழியை போட்டு எஸ்கேப் ஆன சுப்மன் கில்.. தோல்விக்கு காரணம் குறித்து பேச்சு

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் குஜராத் அணி தங்களுடைய இரண்டாவது தோல்வியை தழுவி இருக்கிறது. குஜராத் அணி முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்த நிலையில் கடைசி எட்டு ஓவரில் அந்த அணி 60 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதுவே தோல்விக்கான காரணமாக அமைந்தது. இந்த இடத்தை லக்னோ அணி கடைசி ஓவரில் தான் எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் கேப்டன் கில், ஆடுகளம் நாங்கள் விளையாடும் போது பெரிய ஷாட் ஆடுவதற்கு எதுவானதாக இல்லை.

Shubman Gill

எங்கள் பேட்ஸ்மேன்கள் யாரேனும் ஒருவர் 17, 18 ஓவர் வரை நின்று விளையாடி இருக்க வேண்டும். அப்படி விளையாடி இருந்தால் எளிதாக 200 ரன்களை கடந்து இருப்போம். ஆனால் நல்ல அடித்தளத்தை அமைத்துவிட்டு தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது எங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

நாங்கள் பேட்டிங் செய்யும்போது பந்து நின்று வந்தது. முதல் பந்தில் இருந்து பேட்டிங் செய்ய இது ஒன்றும் எளிதான ஆடுகளமாக இல்லை. இதைப் போன்று எங்களுடைய அணி வீரர்கள் பந்தை வீணடிக்காமல் சிங்கிள்ஸ் அதிகம் எடுத்திருக்க வேண்டும். அது குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும்.

பவுலர்களும் விக்கெட்டுகளை எடுக்க முனைப்பு காட்ட வேண்டும். நாங்கள் போட்டியில் பின்தங்கி இருந்ததால் சில விக்கெட்டுகளை பவுலர்கள் எடுத்திருந்தால் போட்டியை நாங்கள் மேலும் நெருக்கடி கொடுத்திருப்போம். ஆனால் பத்தாவது ஓவருக்கு பிறகு எங்களுக்கு சில விக்கெட்டுகள் கிடைத்தது.

ஆனால் நாங்கள் எதிர்பார்த்த அளவு வந்து களத்தில் நின்று வரவில்லை. எனினும் கடைசி வரை நாங்கள் வெற்றிக்காக போராடியது எங்களுக்கு நல்ல அறிகுறியாக தான் இருக்கின்றது. போட்டியை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும் என்று தான் நான் இரண்டாவது டைம் அவுட் போது வீரர்களுடன் பேசினேன் என்று கில் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, April 12, 2025, 21:26 [IST]
Other articles published on Apr 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+