Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: நீ தான் உண்மையான வீரர்.. ஐபிஎல் நடுவே பயிற்சியில் சுப்மன் கில் செய்த வேலை.. வேற லெவல்

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் அணி புள்ளி பட்டியல் முதல் இடத்தைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடர் விளையாடும் இளைஞர்கள் எப்போதுமே அணியின் வெற்றிக்காக தான் தீவிரமாக பயிற்சி செய்வார்கள்.

இதனால் பல முன்னாள் வீரர்களும் தற்போது உள்ள இளைஞர்களை கடுமையான விமர்சனங்களை வைப்பார்கள். அதாவது தற்போது உள்ள இளைஞர்கள் நாட்டை விட பணத்திற்காக தான் விளையாடுகிறார்கள். இந்திய அணியை விட சொந்த ஐபிஎல் அணி தான் முக்கியம் என்று பல குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்கள்.

Shubman gill

இதற்கு தகுந்தார் போல் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் சுக்கு நூறாக உடைத்து இருக்கிறார் சுப்மன் கில், ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடன் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் சுப்மன் கில் தான் இந்த இந்திய அணிக்கு தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய அளவு அனுபவம் இல்லாத வீரர்களை கொண்டு இந்தியா இந்த தொடரில் விளையாடுகிறது.

இந்த சூழலில் குஜராத் அணி ஏற்கனவே ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் தற்போது கில் இந்திய டெஸ்ட் அணிக்காக தயாராகி வருகிறார். ஓய்வு நேரத்தில் கில் வலை பயிற்சிக்கு வந்து சிவப்பு நிற பந்துகளை வைத்து டெஸ்ட் போட்டிகளுக்காக தற்போது தயாராகி வருகிறார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதனை பாராட்டும் ரசிகர்கள் கில், ஒருவருக்கு மட்டும் தான் இந்திய அணி மீது பற்று இருக்கிறது என்றும் பலரும் ஓய்வில் உள்ள நிலையில் கில் மட்டும்தான் டெஸ்ட் போட்டிக்காக ஐபிஎல் நேரத்திலும் தயாராகி வருகிறார் என்று பாராட்டி வருகின்றனர்.சுப்மன் கில்லின் இந்த செயல் அவர் டெஸ்ட் போட்டி மீது எந்த அளவுக்கு மரியாதை வைத்திருக்கிறார் என்பதை காட்டுகிறது. இதன் மூலம் கில் வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது..

Story first published: Wednesday, May 21, 2025, 23:08 [IST]
Other articles published on May 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+