Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: எனக்கும், ஹர்திக் பாண்டியாவுக்கும் மோதலா? என்ன நடந்தது தெரியுமா? சுப்மன் கில் விளக்கம்

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் ஈகோ மோதல் ஏற்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பல பதிவுகள் வைரல் ஆகியது.

இதில் எலிமினேட்டர் போட்டியில் டாஸ் போடும்போது அது வெட்ட வெளிச்சமாக தெரிந்ததாக பலரும் குறிப்பிட்டிருந்தனர். டாஸ் போட்டு முடித்தவுடன் இரு கேப்டன்களும் கைகுலுக்காமல் விலகி சென்றதாகவும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் நின்றும்தாகவும் சமூக வலைத்தளத்தில் வீடியோக்கள் பரவின.

Gill vs Hardik

மேலும் கில் ஆட்டம் இழந்தவுடன் ஹர்திக் பாண்டியா ஓடி சென்று அவரைப் பார்த்து கத்திவிட்டு வந்ததாகவும், வீடியோ வெளியானது. இதற்கு பல தரப்பினரும் பல முடிச்சுகளை போட்டு விட்டனர். எனினும் இதற்கு சுப்மன் கில் தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "எங்கள் இருவருக்கும் அன்பைத் தவிர வேறு எதுவும் இல்லை. நீங்கள் ஆன்லைனில் பார்க்கும் எதையும் நம்பாதீர்கள்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் ஹர்திக் பாண்டியாவை கட்டி தழுவி இருக்கும் புகைப்படங்களை தேர்ந்தெடுத்து கில் தனது இன்ஸ்டால் பக்கத்தில் வைத்திருக்கிறார்.

இதன் மூலம் ஹர்திக் பாண்டியாவுக்கும் கில்லுக்கும் இடையே எந்த ஒரு மோதலும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது. இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஒரு நாள் கிரிக்கெட்டின் அடுத்த கேப்டனாகவும் கில் தான் வரப்போகிறார்.

இந்த சூழலில் அணியில் உள்ள சீனியர் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக அவர் கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் ஹர்திக் பாண்டியாவை மதிக்கிறேன் என்று போட்டு இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டிருப்பதன் மூலம் அவர் பக்குவமாக நடந்து அணியின் ஒற்றுமையை பேணி காப்பதாக பலரும் பாராட்டியுள்ளனர். ஒரு நல்ல தலைவனுக்கு வேண்டிய தகுதியை கில் தற்போது வெளிகாட்டு இருப்பதாகவும் கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டி உள்ளனர்.

Story first published: Saturday, May 31, 2025, 20:54 [IST]
Other articles published on May 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+