Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிளவ்ஸில் பந்து பட்டுச்சா.. அம்பயரிடம் எகிறிய சுப்மன் கில்.. பதறிப்போன கோச்.. என்ன நடந்தது?

அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் சுப்மன் கில் ரன் அவுட் ஆனார். ஆனால் அந்த ரன் அவுட்டில் ஒரு தவறு இருந்ததாகப் பார்க்கப்பட்டது. அதை அம்பயர்கள் ரீப்ளே செய்து பார்த்து அவுட் கொடுத்தனர். இதனால் கோபமடைந்த சுப்மன் கில், நான்காவது அம்பயரிடம் ஆவேசமாகப் பேசினார். அவரை குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர்கள் அமைதிப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

இந்தப் போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்திருந்தது. சாய் சுதர்ஷன் 23 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்த பின், சுப்மன் கில் மற்ற வீரர்களுடன் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடி வந்தார். சுப்மன் கில் 38 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்திருந்தார்.

IPL 2025 Shubman Gill s Controversial Run-Out Sparks Heated Argument with Umpire

அப்போது 13வது ஓவரின் முடிவில் சுப்மன் கில் ரன் அவுட் ஆனதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவுட் கேட்டது. அப்போது விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென், பந்தை சரியாகப் பிடிக்காமல் ரன் அவுட் செய்திருந்தார். அது ரீப்ளேயில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது. அம்பயர்கள் அதை பலமுறை சரி பார்த்தனர். ஆனாலும், பந்து கிளாசெனின் கிளவ்ஸில் பட்டு இருக்கும்போதுதான் பெய்ல்ஸ் (bails) தகர்ந்தன என்ற முடிவுக்கு வந்த அம்பயர்கள், சுப்மன் கில்லுக்கு அவுட் கொடுத்தனர்.

ஆனால், பெய்ல்ஸ் வெளியே வரும்போது, கிளாசெனின் கிளவ்ஸுக்கும் பந்துக்கும் இடையே இடைவெளி இருப்பதாகவே நேரலை காட்சிகளில் தெரிந்தது. இந்த சந்தேகத்திற்குரிய ரன் அவுட்டை அம்பயர்கள் நாட் அவுட் என அறிவித்திருக்க வேண்டும். ஆனால் சந்தேகம் இருந்தபோதும், பேட்ஸ்மேனுக்கு எதிரான முடிவை அம்பயர்கள் எடுத்தனர்.

இதை அடுத்து கோபமடைந்த சுப்மன் கில், ஆடுகளத்தை விட்டு ஆவேசத்துடன் வெளியேறினார். அங்கே பவுண்டரி எல்லைக்கு அருகே நின்றிருந்த நான்காவது அம்பயரிடம், நேராக வந்த சுப்மன் கில், 'இது அவுட்டில்லை' என்பதை கோபமாகச் சொன்னார். சுப்மன் கில் மிகவும் ஆத்திரத்துடன் இருப்பதைப் பார்த்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர்கள், அவர் அம்பயருடன் மேலும் வாக்குவாதம் செய்வதைத் தடுத்து அவரை அழைத்துச் சென்றனர்.

அதன் பின் இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீசியபோது, டிஆர்எஸ் நிகழ்விலும் அம்பயர்கள் குஜராத் அணிக்கு எதிரான முடிவு எடுத்தனர். அப்போதும் சுப்மன் கில், அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை அடுத்து, அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Story first published: Saturday, May 3, 2025, 7:43 [IST]
Other articles published on May 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+