Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஞ்சு சாம்சன் vs டிராவிட் இடையிலான மோதல்.. முடிவுக்கு கொண்டு வர கங்குலி முயற்சி

கொல்கத்தா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணியும், ராஜஸ்தான் அணியும் தொடர் தோல்விகளை தழுவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த இரண்டு அணிகளும் பிளே ஆப் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது. இந்த சூழலில் ராஜஸ்தான் அணியில் கேப்டனான சஞ்சு சாம்சன் தற்போது காயம் ஏற்பட்டதாக கூறி அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் சஞ்சு சாம்சனும், அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட்டுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதில்லை என்றும் ராகுல் டிராவிட் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில் சஞ்சு சாம்சன் கலந்து கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

sanju samson and dravid

இதற்கு காரணம் ராஜஸ்தான் அணி உரிமையாளர் ஒருவரின் சொந்தமான ரியான் பாரக் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு ராகுல் டிராவிட் ஒப்புதல் வழங்கியதே இதற்கு காரணம் எனத் தெரிகிறது. இதனால் அணியில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியை விட்டு விலகி வேறு அணிக்கு செல்லலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கே கே ஆர் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இந்த போட்டி முடிவடைந்த உடன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கங்குலி, ராகுல் டிராவிட் சஞ்சு சாம்சனையும் சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் டிராவிட்டின் நட்பை சஞ்சு சாம்சன் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும் இருவருக்கும் இடையான கருத்து வேறுபாட்டை நீக்கி பழைய உறவில் தொடருமாறு அவர் வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ ஒன்றை ராஜஸ்தான் அணி நிர்வாகம் தங்களது சமூகத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தது. ஆனால் அது உடனடியாக நீக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கங்குலி 14 வயது வீரரான வைபவ் சூரிய வன்ஷியை சந்தித்து பேசி இருக்கிறார்.

Story first published: Monday, May 5, 2025, 14:37 [IST]
Other articles published on May 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+