Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025:முகமது ஷமி இன்று பட்டையை கிளப்புவார்..SRH பயிற்சியாளர் கருத்து..இன்று 300 ரன் அடிக்கப்படுமா

கொல்கத்தா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் இன்று கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கே கே ஆர் அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் எப்போதுமே ரன் குவிப்புக்கு சாதகமான மைதானம் ஆகும். இந்த ஆடுகளத்தில் பவுண்டரி மிகவும் குறைவான தூரத்தில் இருப்பதால் பேட்ஸ்மேன்கள், சிக்சர், பவுண்டரி அடித்து ரன்களை சேர்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் பட்டையை கிளப்பி 300 ரன்கள் எட்டுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த இரண்டு போட்டியிலும் சன்ரைசர்ஸ் வீரர்கள் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், கொல்கத்தாவில் சன்ரைசர்ஸ் படை பார்ம்க்கு திரும்பும் என தெரிகிறது. இதேபோன்று சமி கொல்கத்தாவில் தான் வளர்ந்தார் என்பதால் சன்ரைசர்ஸ் அணிக்காக களமிறங்கும் அவர் இன்று அபாரமாக செயல்படுவார் என்று SRH ரசிகர்கள் நம்புகின்றனர்.

Mohammed shami

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சன்ரைசர்ஸ் அணியில் துணை பயிற்சி முகமது சமி மிகவும் பிரமாதமான பவுலர். தன்னுடைய திறமையை அவர் பல ஆண்டுகளாக நிரூபித்து வருகிறார். இன்றைய ஆடுகளம் அவருக்கு ஏற்ற வகையில் இருக்கும். எப்போதுமே நல்ல லெங்தில் பந்து வீசுவது தான் இந்த ஆடுகளத்திற்கு சரியான பவுலிங் ஆக இருக்கும்.

எனவே இன்றைய ஆட்டத்தில் அவர் எவ்வாறு பந்து வீசுகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றேன் என்று கூறியுள்ளார். சமி நடப்பு சீசனில் மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருக்கிறார். அவருடைய எக்னாமிக் 11 என்ற அளவில் அதிகமாக இருக்கிறது.

சன்ரைசர்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் இதுவரை 28 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் கொல்கத்தா அணி 19 முறை வெற்றியை பெற்று இருக்கிறது. கடந்த பைனலில் இரு அணிகளுமே மோதிய நிலையில், இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதனால் அதற்கு பழித்தீர்க்கும் விதமாக சன்ரைசர்ஸ் அணி இன்று விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, April 3, 2025, 15:07 [IST]
Other articles published on Apr 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+