IPL 2025: 55 பந்துகளில் 141 ரன்கள் எடுத்த அபிஷேக்.. சன்ரைசர்ஸ் மாஸ் கம்பேக்.. 10வது இடத்தில் சிஎஸ்கே
ஐதராபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் அணி வீரர் அபிஷேக் ஷர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் விளாசி அபார சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன் அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் இளம் வீரர் பிரியன்ஸ் ஆர்யா 13 பந்துகளில் 36 ரன்களும், பிராப்சிம்ரன் சிங் 23 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார்.

இதைப் போன்று நெஹல் வதேரா 27 ரன்கள் எடுக்க ஸஷாங் சிங் மற்றும் மேக்ஸ்வெல் சொற்ப ரன்களில் வெளியேறினர். எனினும் மார்கஸ் ஸ்டோனிஸ் இறுதியில் நான்கு சிக்ஸர் ஒரு பவுண்டரி என 11 பந்துகளின் 34 ரன்கள் எடுத்தார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது.சன்ரைசஸ் பந்துவீச்சு தரப்பில் ஹர்சல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை அடுத்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் டிராவிஸ் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஜோடி இந்த தொடரில் பெரிய அளவு சாதிக்கவில்லை. இந்த நிலையில் இருவரும் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தங்களுடைய பழைய அதிரடியை கட்டினர். ஒரு பக்கம் ஹெட் அபாரமாக விளையாடினாலும், அபிஷேக் ஷர்மா மறுபக்கம் தமது திறமையை இன்று நிரூபித்தார். இந்த ஜோடி பஞ்சாப் பவுலிங்கை சுக்கு நூறாக உடைத்ததால் 3.3 ஓவர்கள் எல்லாம் 50 ரன்கள் கடந்தது.
சிறப்பாக விளையாடிய அபிஷேக்சர்மா 19 பந்துகளில் அரை சதம் கடந்தார்.மறுபுறம் ஹெட் 31 பந்துகளில் அரை சதம் எடுத்தார். எனினும் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து அதிரடி காட்டினார். இதனால் கிறச் கெயில் 30 பந்தில் சதம் என்ற சாதனையை அபிஷேக் ஷர்மா முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 40 பந்துகளில் அவர் சதத்தை பூர்த்தி செய்தார்.தொடர்ந்து கம்ப்யூட்டர் கிரிக்கெட் கேமில் வருவது போல் சிக்ஸர் பவுண்டரி என பறக்க விட 55 பந்துகளில் அவர் 141 ரன்கள் சேர்த்தார்.
இதில் 14 பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களும் அடங்கும். அபிஷேக் ஷர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 256 என்ற அளவில் இருந்தது டிராவிஸ் ஹெட் 37 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதுபோன்று கிளாசன் 14 பந்துகளில் 21 ரன்களும், இசான் கிசன் 9 ரன்களும் எடுக்க சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 247 ரன்களை எடுத்தது.
சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங்கை தடுக்க முடியாமல் பஞ்சாப் அணி எட்டு பவுலர்களை பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications