Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- சேப்பாக்கத்தில் முதல் முறையாக சிஎஸ்கேவை வீழ்த்திய சன்ரைசர்ஸ்.. தொடரை விட்டு வெளியேறும் CSK

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழாவது லீக் போட்டியில் தோல்வியைத் தழுவி தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர்கள் ஷேக் ரசித் டக் அவுட் ஆகி வெளியேற இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே 19 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். இதில் ஆறு பவுண்டரிகள் அடங்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷாம்கரன் 10 பந்துகளில் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்தார்.

CSK

அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க முயற்சி செய்த ஜடேஜா 17 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி சரிவை நோக்கி சென்ற நிலையில், சிஎஸ்கே அணிக்காக தங்களுடைய முதல் போட்டியில் விளையாடிய பிரவீஸ் அதிரடி காட்டினார். நான்கு சிக்சர், ஒரு பவுண்டரி என 25 பந்துகளில் அவர் 42 ரன்கள் எடுத்தார்.

அதிரடி வீரர் சிவம் துபே 12 ரன்கள் வெளியேற தோனி 6 ரன்களில் முக்கிய கட்டத்தில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து மற்ற சிஎஸ்கே வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். தீபக் ஹூடா கடைசி வரை போராடி 21 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களம் இறங்கியது. அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா முதல் ஓவரில் இரண்டாவது பந்திலே ஆட்டம் இழந்தார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கொஞ்சம் உற்சாகம் அடைந்தனர். இதே போன்று பவர் பிளேவுக்குள் டிராவிஸ் ஹெட் 19 ரன்களில் வெளியே அதிரடி வீரர் ஹென்றிச் கிளாசன் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதனால் சன்ரைசர்ஸ் அணி 8 புள்ளி ஒரு ஓவரில் 54 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியும் தோல்வியை பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இஷான் கிஷன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 34 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார்.

இளம் வீரர் அங்கீத் வர்மா 19 ரன்கள் எடுக்க வெற்றி யாருக்கு என்ற பரபரப்பு ஏற்பட்டது. எனினும் கமெண்டு மெண்டீஸ் மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் பொறுப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த ஜோடியை பிரிக்க சிஎஸ்கே வீரர்கள் தடுமாறினர் எனினும் எந்த ஒரு நெருக்கடியும் இல்லாமல் அபாரமாக விளையாடிய கவிண்டு மெண்டீஸ் 22 பந்துகளின் 32 ரன்கள் சேர்த்தார். நிதீஷ்குமார் 19 ரன்கள் எடுக்க சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது. சிஎஸ்கே பந்துவீச்சு தரப்பில் நூர் அஹமத் இரண்டு விக்கெட்டுளும் கலீல் அஹமத், அன்சில் கம்போஜ், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் 6 முறை சன்ரைசர்ஸ் அணி சிஎஸ்கேவை சேப்பாக்கத்தில் எதிர்கொண்டு முதல் வெற்றியை பெற்றுள்ளது.

Story first published: Friday, April 25, 2025, 23:37 [IST]
Other articles published on Apr 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+