Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL:போன வாரம் தான் 280 அடிச்சோம்..மோசமான பேட்டிங்! தொடர்ந்து 3 தோல்வி குறித்து SRH கேப்டன் கம்மின்ஸ்

கொல்கத்தா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயல்படவில்லை. சன்ரைசஸ் அணி முதல் போட்டியில் 280 ரன்கள் அடித்தாலும், அதன் பிறகு மூன்று போட்டிகளில் தடுமாறி இருக்கிறது. இதனால் சன்ரைசர்ஸ் அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் பத்தாம் இடத்தை பிடித்திருக்கிறது.

கொல்கத்தா அணி நிர்ணயித்த 200 ரன்கள் என்று ஸ்கோரை சேஸ் செய்த சன்ரைசர்ஸ் அணி 120 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், "இன்றைய ஆட்டம் எங்களுக்கு சிறப்பானது ஒன்றாக இல்லை."

Pat cummins

"200 ரன்கள் இந்த இலக்கை எங்களால் எட்ட முடியும் என்று தான் நினைத்தோம். ஏனென்றால் ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக தான் இருந்தது. நாங்கள் பந்து வீசும் போது பில்டிங்கில் பல தவறுகளை செய்து விட்டோம். சில கேட்சுகளையும் நாங்கள் தவறவிட்டோம். பேட்டிங் செய்யும்போது கொஞ்சம் எதார்த்தமாக விளையாட வேண்டும்."

"தொடர்ந்து மூன்று போட்டிகளில் இது போல் ஆகிவிட்டது. எங்களால் பேட்டிங்கில் சரியாக விளையாட முடியவில்லை. இரண்டு வாரத்திற்கு முன்பு தான் நாங்கள் 250 ரன்களை குவித்தோம். எங்களுடைய பேட்டர்ஸ் எப்போதுமே ஆக்ரோஷமாக விளையாடும்போது, தான் சிறந்து விளங்குகிறார்கள். அதே சமயம் வித்தியாசமான அணுகுமுறையை வெளிப்படுத்தவும் யோசிக்க வேண்டும். பேட்டிங்கை விட எங்களுடைய பில்டிங் தான் எங்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது."

"இரண்டு கேட்ச்களை தவற விட்டோம். பவுலிங்கும் அவ்வளவு மோசமானதாக இல்லை. கொல்கத்தா அணி வீரர்கள் இறுதி கட்டத்தில் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார்கள். நாங்கள் வெறும் மூன்று ஓவர்கள் தான் சுழற்பந்துவீசினோம். ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சு எடுபடாது என்று நினைத்தேன். கட்டர்ஸ் வகையிலான பந்து இங்கு நன்றாக பவுலர்களுக்கு கை கொடுத்தது. எனவே அதனை கொல்கத்தா அணி வீரர்கள் சிறப்பாக கையாண்டு இருக்கிறார்கள்" என்று சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, April 4, 2025, 7:00 [IST]
Other articles published on Apr 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+