Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: கஷ்டமான விக்கெட்டை கொடுத்துட்டாங்க.. நாங்க தவறு செய்துவிட்டோம்.. SRH கேப்டன் கம்மின்ஸ்

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறது. சன்ரைசர்ஸ் அணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர்கள் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்கள். பந்துவீச்சும் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதனால் விளையாடிய 7 போட்டிகளில் இரண்டு வெற்றி ,ஐந்து தோல்வி என நான்கு புள்ளிகள் உடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர். இந்த சூழலில் மும்பை அணிக்கு எதிரான தோல்வியை தழுவிய குறித்து சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கம்மின்ஸ் கூறியதை தற்போது பார்க்கலாம்.

Pat cummins

இன்றைய ஆட்டத்தில் எங்களுக்கு வழங்கப்பட்ட ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சுலபமானதாக இல்லை. நாங்கள் சில ரன்களை குறைவாக எடுத்து விட்டோம் என நினைக்கின்றேன். நாங்கள் பேட்டிங்கில் கூடுதலாக சில ரன்கள் அடித்திருக்க வேண்டும்.இது கடினமான ஆடுகளம் தான். நாங்கள் இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு வந்தோம்.

ஆனால் நாங்கள் நினைத்தது போல் இல்லை. இதைப் போன்று மும்பை வீரர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் எந்த இடத்தில் ரன்கள் அடிப்போமோ அந்த இடத்தில் அவர்கள் பந்து வீச வில்லை. எங்கள் அணியில் எந்த குறையும் இல்லை. ஆனால் 160 ரன்கள் என்பது இந்த ஆட்டத்தில் குறைவானது இலக்காக தான் மாறிவிட்டது. பௌலிங்லும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் என்று நினைக்கின்றேன்.

எனினும் இதுபோன்ற போட்டிகளில் வெற்றி பெற விக்கெட்டுகள் தேவை. எங்கள் அணியில் டெத் பவுலிங்கும் சிறப்பாக இருக்கிறது. இம்பாக்ட் வீரர் வெறும் ஒன்று இரண்டு ஓவர்தான் வீச முடியும் என்று எனக்கு தெரியும். இதனால் தான் நாங்கள் ராகுலை தேர்வு செய்தோம். இந்த சூழலில் இருந்து இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக இந்த சீசனில் எங்களுக்கு எதுவும் சரியாக அமையவில்லை. தற்போது எங்களுக்கு சிறிய ஒரு பிரேக் கிடைத்து இருக்கிறது. இதில் நாங்கள் என்ன தவறு செய்கின்றோம். எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்துவோம். எங்கள் வீரர்கள் பவர் பிளேவில் நன்றாக விளையாடுவார்கள். அதற்காக நாங்கள் பேட்டை சுற்றுகிறோம் என்று அர்த்தம் கிடையாது. அடுத்த போட்டி ஹைதராபாத்தில் தான். அந்த ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

Story first published: Thursday, April 17, 2025, 23:47 [IST]
Other articles published on Apr 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+