ஐதராபாத் : ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தார்கள். இதற்கு காரணம் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர் தான் அவர் ஹைதராபாத் அணிக்காக தன்னுடைய உடல் ஆவி என அனைத்தையும் கொடுத்தார். அதன்பிறகு அவர் அந்த அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டது தனி கதை. இதுபோன்று வில்லியம்சன் போன்ற ஜென்டில்மேன் அந்த அணியில் கேப்டனாக இருந்தார்கள்.
ஆனால் ஹைதராபாத் அணியால் 2016 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் பட்டம் வென்றதற்கு பிறகு அந்த அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த சூழலில் ஐதராபாத் அணி தங்களுடைய யுத்தியை மாற்றி அமைத்து பல வெளிநாட்டு வீரர்கள் மீது முதலீடு செய்தது. இதன் பயனாக ஆஸ்திரேலிய கேப்டன் 20 கோடியே 50 லட்சம் ரூபாய் ஏலத் தொகையில் ஹைதராபாத் அணிக்கு வந்தார்.

அதன் பிறகு ஹைதராபாத் அணி புத்துயிர் பெற்று கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை வந்தது. இந்த நிலையில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் ஐதராபாத் இருக்கும்போது, மெகா ஏலத்தில் மூலம் அந்த அணி மீண்டும் உடையும் இழக்கும் அபாயத்தில் இருக்கிறது. இந்த சூழலில் மற்ற அணிகளை விட ஹைதராபாத்தில் தான் வீரர்களை கட்டமைக்க தீவிரம் காட்டி வருகிறது.
காரணம் கஷ்டப்பட்டு ஒரு அணியை உருவாக்கி இறுதிப்போட்டி வரை வந்த பிறகு மீண்டும் அந்த அணி உடைகிறது என்றால் எந்த உரிமையாளருக்கு தான் சந்தோஷமாக இருக்கும். இதனால் எப்படியாவது சிறந்த ஆறு வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று காவியா மாறன் இருக்கிறார்.
இதில் காவியா மாறன் ஒரு புதிய திட்டத்தை தீட்டு இருக்கிறார். அதன்படி எந்த வெளிநாட்டு வீரர்களையும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக அனுமதிக்கப்பட்ட அளவைவிட அவர்களுக்கு அதிக சம்பளத்தை வழங்க போகிறார். அதன்படி முதல் வீரராக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஹென்ரிச் கிளாசினை தான் அவர் தக்கவைக்க போகிறார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு சீசனில் கிளாசென் 16 போட்டிகளில் விளையாடி 479 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 171 என்ற அளவில் இருந்தது. இதேபோன்று 2023 ஆம் ஆண்டு 12 போட்டிகளில் விளையாடி 448 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 177 ஆகும்.
இதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதம் அடங்கும். இப்படி அபாரமாக விளையாடி வரும் கிளாசனை வேறு அணிக்கு செல்ல விடக்கூடாது என்பதற்காக அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக 23 கோடி கொடுத்து முதல் வீரராக தக்க வைக்க காவியா மாறன் முடிவெடுத்திருக்கிறார்.
இதேபோன்று பாட் கம்மின்ஸ் தொடர்ந்து இனி ஐபில் போட்டிகளில் அடுத்தடுத்து சீசன்களில் விளையாடுவது சந்தேகமாக இருக்கிறது. இதனால் அவரை இரண்டாவது வீரராக சன்ரைசர்ஸ் அணி தக்க வைத்துக் கொள்ளப் போகிறது. எனினும் இரண்டாவது வீரருக்கு 14 கோடி ரூபாய் தான் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் கம்மின்ஸ் அவருக்கு 18 கோடி ரூபாய் வழங்க காவியா மாறன் முடிவெடுத்திருக்கிறார்.
இதேபோன்று மூன்றாவது வீரராக அபிஷேக் ஷர்மாவை காவியா மாறன் தேர்ந்தெடுத்திருக்கிறார். அபிஷேக் ஷர்மா கடந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 484 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று அரை சதம் அடங்கும். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 204 என்ற அளவில் மிரட்டலான வகையில் இருக்கிறது. இதனால் அவரை 14 கோடி ரூபாய் கொடுத்து மூன்றாவது வீரராக தேர்வு செய்ய காவியா மாறன் ஆர்வமாக இருக்கிறார்.
ஆனால் விதிகளின்படி மூன்றாவது வீரருக்கு 11 கோடி ரூபாய் தான் கொடுக்க வேண்டும். இந்த தருணத்தில் தான் நான்காவது வீரருக்கு அதிகபட்சமாக 18 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால் காவியா மாறன் முதல் மூன்று வீரர்களுக்கு அதிக சம்பளத்தை கொடுத்திருப்பதால் நான்காவது வீரரின் ஊதியத்தை குறைத்து இருக்கிறார். அதன்படி சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 12 கோடி ரூபாய் கொடுத்து எடுக்க அவர் முடிவு எடுத்திருக்கிறார்.
கடந்த சீசனில் டிராவிஸ் ஹெட் ஆறு கோடி ரூபாய்க்கு தான் சென்ற நிலையில், தற்போது அவருக்கு 12 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. டிராவிஸ் ஹெடும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாட முடியுமா என தெரியாததால், அவர் ஊதியம் குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்காக 15 போட்டிகளில் விளையாடி 567 ரன்கள் குவித்து இருக்கிறார்.
இதில் ஒரு சதம், நான்கு அரை சதம் அடங்கும். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 191 என்ற அளவில் இருக்கிறது. ஐந்தாவது வீரராக நிதிஷ் ரெட்டியை சன்ரைசர்ஸ் தேர்வு செய்ய உள்ளது.நிதிஷ் ரெட்டிக்கு குறைந்தபட்சம் 14 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால் இளம் வீரருக்கு அவ்வளவு தொகை தேவையில்லை என முடிவெடுத்துள்ள சன்ரைசர்ஸ் அணி அவரிடம் பேசி ஆறு கோடி ரூபாய்க்கு தக்க வைக்க முடிவெடுத்திருக்கிறது.
இதன் மூலம் ஐந்து வீரர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு கிடைத்துவிட்டார்கள். ஆறாவது வீரராக புவனேஸ்வர் குமார் அல்லது நடராஜன் அல்லது வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்ய சன்ரைசஸ் முடிவு எடுக்கும். ஐபிஎல் விதிகளின்படி ஐந்து வீரர்களுக்கு சம்பளத்தை குறைத்து இல்லை அதிகமாக வழங்கி தக்க வைத்துக் கொள்ளலாம். ஆனால் 75 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஃபார்முலாவை தான் காவியா மாறன் பயன்படுத்தப் போகிறார் இது சன்ரைசர்ஸ் அணிக்கு கை கொடுக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.