Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 -SRH தக்க வைத்த வீரர்கள் பட்டியல்! வெறும் ரூ.45 கோடி உடன் ஏலத்துக்கு செல்லும் காவ்யா மாறன்

ஐதராபாத் : ஐபிஎல் மெகா ஏலத்தில் பெரும்பாலான அணிகள் கையிருப்பில் அதிக தொகை வைத்துக் கொண்டு ஏலத்தை சந்திக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறது. ஆனால் சில அணிகள் மட்டும் ஏலத்தில் வீரர்களை விட்டால் அவர்களை மீண்டும் வாங்க முடியாது என்று எண்ணத்தில் இருக்கிறது.

குறிப்பாக சன்ரைசர்ஸ் அணியில் வெளிநாட்டு ஸ்டார் வீரர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த வீரர்களை எல்லாம் எப்படியாவது மற்ற அணிகள் ஏலத்தில் வாங்கி விட வேண்டும் என இருக்கிறது. இதனால் காவியா மாறன் தைரியமான ஒரு முடிவை எடுத்துள்ளார்.

ipl 2025 srh kavya maran csk 2025

அதன்படி பிசிசிஐ அறிவித்த விதியை பின்பற்றாமல் பிளான் பி- ஐ பயன்படுத்தி சில வீரர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்தும் சில வீரர்களுக்கு குறைவான சம்பளத்தை கொடுத்தும் ஏலத்தில் வீரர்களை தக்க வைக்கப் போகிறார்.அதாவது முதல் வீரருக்கு 18 கோடி ரூபாயும், இரண்டாவது வீரருக்கு 14 கோடி ரூபாயும், மூன்றாவது வீரருக்கு 11 கோடி ரூபாயும், நான்காவது வீரருக்கு 18 கோடி ரூபாயும், ஐந்தாவது வீரருக்கு 14 கோடி கொடுக்க வேண்டும்.

ஏலத்திற்கு முன்பு அதிகபட்சமாக 75 கோடி ரூபாயை அணி நிர்வாகம் செலவு செய்யலாம். ஆனால் இந்த 75 கோடி ரூபாயை தங்கள் விருப்பத்திற்கு தகுந்தார் போல் எப்படி வேண்டுமானாலும் பிரித்துக் கொள்ளலாம் என்ற ஒரு விதியும் இருந்தது. இதை தான் தற்போது காவியா மாறன் பயன்படுத்தியிருக்கிறார். அதனை பயன்படுத்தி தென்னாப்பிரிக்கா வீரர் கிளாசனுக்கு அதிகபட்சமாக 23 கோடி ரூபாயும், ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ்க்கு 18 கோடி ரூபாயும் வழங்குகிறது.

அபிஷேக் சர்மாவுக்கு 14 கோடி ரூபாயும் ஆஸ்திரேலிய வீரர் டிராவிட் ஹெட்க்கு 14 கோடி ரூபாயும், நிதிஷ் குமார் ரெட்டிக்கு 6 கோடி ரூபாயும் காவ்யா மாறன் வழங்கி இருக்கிறார்.விதிகளின்படி நிதிஷ்குமார் ரெட்டிக்கு 14 கோடி ரூபாய் கொடுத்து இருக்க வேண்டும்.

ஆனால் நிதிஷ் குமாரின் ஊதியத்தை குறைத்து விட்டு அவருக்கு வழங்க வேண்டிய எட்டு கோடி ரூபாயும் டிராவிஸ் ஹெட் வழங்க வேண்டிய நான்கு கோடி ரூபாயையும் மற்ற மூன்று வீரர்களுக்கு காவியா மாறன் பிரித்து வழங்கி விட்டார்.இதன் மூலம் வெறும் 45 கோடியை வைத்து தான் சன்ரைசர்ஸ் அணி ஏலத்திற்கு செல்ல இருக்கிறது.

Story first published: Wednesday, October 30, 2024, 18:09 [IST]
Other articles published on Oct 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+