Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: சன்ரைசர்ஸ் 300 ரன்கள் அடிப்பாங்கனு சொன்ன ஸ்டேயின்..138 ரன்கள் குறைவாக அடித்த கம்மின்ஸ் படை

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி முதல் முறையாக 300 ரன்கள் அடிக்கும் என தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஸ்டெயின் கணித்திருந்த நிலையில், சன்ரைசர்ஸ் அணி வெறும் 162 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.

இதனால் மும்பை அணி சிறப்பாக பந்து வீசி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் ஷர்மா ஏழு பவுண்டரிகளை விரட்டி 28 பந்துகளில் 40 ரன்கள் தான் எடுத்தார்.

SRH vs MI

முன்னாள் மும்பை வீரரான இசான் கிஷன் இரண்டு ரன்களில் பெவிலியன் திரும்ப, டிராவிஸ் ஹெட் தன்னுடைய வழக்கத்திற்கு மாறான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 28 ரன்கள் தான் சேர்த்தார். மும்பை இந்தியன்ஸ் அணி பவர் பிளே முடிவில் வெறும் 46 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிதீஷ் குமார் 21 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதேபோன்று சன்ரைசர்ஸ் அணியில் அதிக தொகைக்கு தேர்வு செய்யப்பட்ட ஹென்றிச் கிளாசன் இரண்டு சிக்ஸர், 3 பவுண்டரி என 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் கடைசி மூன்று ஓவர்களில் அந்த அணி அதிக ரன்களை விட்டுக் கொடுத்தது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் அன்கீட் வருமா மூன்று சிக்சர்களை விளாசி 22 ரன்களை அடித்தார்.

இதனால் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை பந்துவீச்சு தரப்பில் வில் ஜேக்ஸ்
இரண்டு விக்கெட்டுகளையும்,பௌல்ட், பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

சன்ரைசர்ஸ் அணி கடைசி மூன்று ஓவரில் 47 ரன்கள் அடித்திருந்தது. ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்துமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆடுகளம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால் மும்பை அணிக்கும் இந்த இலக்கை தொடக்க கடும் சவால் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பனிப்பொழிவு மும்பைக்கு சாதகமாக அமையலாம்.

Story first published: Thursday, April 17, 2025, 21:34 [IST]
Other articles published on Apr 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+