Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

LSG vs SRH: அந்த சீனே இங்கு கிடையாது.. சன்ரைசர்ஸ் பேட்டிங்கை பதம் பார்த்த லக்னோ பவுலர்கள்

ஐதராபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 250 ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்துல் தாக்கூர், பிரின்ஸ் யாதவ் போன்ற வீரர்கள் அபாரமாக பந்துவீசி, அந்த அணியை 190 ரன்களில் சுருட்டினர்.

ஐதராபாத்தில் ரன் குவிப்புக்கு சாதகமான மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 6 ரன்களில் சர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

SRH vs LSG

இதேபோன்று இஷான் கிஷன் கடந்த போட்டியில் சதம் விளாசிய நிலையில் இம்முறை டக் அவுட்டாகி வெளியேறினார். அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தபோது பிரின்ஸ் யாதவ் பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆனார். இதை அடுத்து நிதிஷ் குமார் மற்றும் கிளாசன் ஆகியோர் ஜோடி சேர்ந்து சன்ரைசர்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இதில் ரவி பிஸ்னாய் ஓவரில் நிதீஷ்குமார் ரெட்டி 32 ரன்களில் வெளியேற ஹென்றிச் கிளாசன் 26 ரன்கள் எடுத்திருந்தபோது non ஸ்டிரைக்கரில் நின்று கொண்டிருந்த போது ரன் அவுட் ஆனார். இறுதியில் அன்கீத் யாதவ் 5 சிக்ஸர்களை விரட்டி 13 பந்துகளில் 36 ரன்களும் கேப்டன் கம்மின்ஸ் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி நான்கு பந்துகளில் 18 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் தடுமாறினர்.

இதனால் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறது. லக்னோ அணியின் பந்துவீச்சு தரப்பில் சர்துல் தாக்கூர் நான்கு ஓவர்கள் வீசி 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் மெகா ஏலத்தில் யாராலும் வாங்கப்படாத நிலையில் மாற்று வீரராக தான் அணிக்குள் சர்துல் வந்தார். ஆனால் தன்னுடைய திறமையை நிரூபித்து 10 அணிகளும் செய்தது தவறு என்பதை தனது பந்துவீச்சு மூலம் காட்டியிருக்கிறார். இதேபோன்று மற்ற பவுலர்கள் அனைவரும் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Story first published: Thursday, March 27, 2025, 21:41 [IST]
Other articles published on Mar 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+