Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- மொரட்டு அணியாக களமிறங்கும் சன்ரைசர்ஸ்.. காவ்யா மாறனுக்கு ஜாலி தான்.. பிளேயிங் XI பாருங்க

ஐதராபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கு காரணம் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி கடந்த முறை ஐபிஎல் இறுதிப்போட்டி வரை சென்றது.இந்த நிலையில் தற்போது அந்த அணி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

சன்ரைசர்ஸ் அணி தங்களுடைய முக்கிய வீரர்களை ஏலத்திற்கு முன்பே தக்க வைத்து கொண்டதால் அந்த அணியின் பலம் கொஞ்சம் கூட மாறவில்லை. டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, ஹென்றிச் கிளாசன், நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ் போன்ற வீரர்கள் core அணியில் இருக்கின்றார்.

IPL SRH

இதில் பேட்டிங் வரிசையில் மேலும் வலுப்படுத்தும் விதமாக அதிரடி வீரர் இசான் கிஷனும் வந்து சேர்ந்திருக்கிறார். ஹென்ரிச் கிளாசனையும் சேர்த்தால், சன்ரைசர்ஸ் இன் டாப் 4 வீரர்கள் அசுர பலத்துடன் இருக்கிறார்கள். பயிற்சி ஆட்டத்தில் இசான் கிஷன் நெருப்பை கக்கி கொண்டு அதிரடி காட்டுகிறார்.இதே போன்று நிதிஷ் ரெட்டியும் காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.

இதைப் போன்று சன்ரைசர்ஸ் அணியில் பாட் கம்மின்ஸ்க்கு பக்க பலமாக முகமது சமியும் இணைந்து இருக்கிறார். இதேபோன்று உனாட்கட், ஹர்சல் பட்டேல் ஆகியோரும் அணியில் இருக்கின்றார்கள்.. சன்ரைசர்ஸ் அணியின் பிளஸ் பாயிண்ட் ஆக ஆடம் சாம்பா, ராகுல் சாகர் என இரண்டு திறமை வாய்ந்த சுழற் பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

சன்ரைசர்ஸ் அணியில் பலவீனம் என்று பார்த்தால் பாட் கம்மின்ஸ்க்கு கை கொடுக்கும் விதமாக அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லை.
இதைப் போன்று அபினவ் மனோகர், சச்சின் பேபி, அங்கீத் வர்மா போன்ற இளம் வீரர்கள் நடு வரிசையில் கை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

சன்ரைசர்ஸ் அணியில் X Factor ஆக பேட்டிங்கில் அதிரடி வீரர் அபினவ் மனோகரும்,பந்துவீச்சில் இலங்கை அணியின் ஈசான் மலிங்காவும் இருப்பார்கள். இவர்கள் கிளிக் ஆனால் மொரட்டு அணியாகவே சன்ரைசர்ஸ் இருக்கிறது. இந்த அணி குறித்து கருத்து தெரிவித்த ஆகாஷ் சோப்ரா சன்ரைசர்ஸ் அணி, தற்போது பந்துவீச்சையும் பலப்படுத்தி இருப்பதால் கோப்பையை வெல்ல முடியும் என்று கூறியுள்ளார்.

பிளேயிங் லெவன். 1, டிராவிஸ் ஹெட், 2, அபிஷேக் சர்மா, 3, இசான் கிசன், 4, ஹென்ரிச் கிளாசன், 5, நிதிஷ் குமார் ரெட்டி, 6, அபினவ் மனோகர், 7, ஹர்சல் பட்டேல், 8, பாட் கம்மின்ஸ், 9, முகமது ஷமி, 10. ஆடம் சாம்பா, 11, ராகுல் சாஹர். 12, சச்சின் பேபி

Story first published: Wednesday, March 19, 2025, 7:00 [IST]
Other articles published on Mar 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+