Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SRH vs DC- என்ன டா பெரிய பேட்டிங் படை.. SRH துவம்சம் செய்த டெல்லி.. 5 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்

விசாகப்பட்டினம்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி அணிக்கு எதிராக ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருப்பதாக பல கிரிக்கெட் வல்லுனர்களும் பாராட்டி வருகின்றனர்.

முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 280 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தியது. இந்த நிலையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி முதலில் ஆட்டம் இழந்தது. இஷான் கிஷன் இரண்டு ரன்களிலும், நிதிஷ்குமார் ரெட்டி டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

SRH vs DC

அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 12 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்த நிலையில் அவரும் பெவிலியன் திரும்பினார். நிதிஷ் குமார் ரெட்டி, டிராவிஸ் ஹெட் மற்றும் இசான் கிஷன் என மூன்று வீரர்களுமே ஸ்டார்க்கின் அதிவேக பந்துவீச்சில் சிக்கி தங்களுடைய விக்கெட்டை பறி கொடுத்தார்கள்.

இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி 37 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து நடு வரிசையில் அங்கீத் வர்மா மற்றும் ஹென்றிச் கிளாசன் ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடினர். சன்ரைசர்ஸ் அணி சரிவில் இருந்தாலும் இருவரும் சிக்சர் பவுண்டரி அடிப்பதிலேயே கவனமாக இருந்தார்கள்.

அங்கீத் வர்மா 41 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். கிளாசன் 19 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். இதன் பிறகு களம் இறங்கிய மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழ்ந்தனர். இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவரில் 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களுக்குள் சுருண்டு இருக்க வேண்டியது, ஆனால் அங்கீத் வர்மா மட்டும் விளையாடி கௌரவமான இலக்கை எட்ட உதவியிருக்கிறார்கள்.

இந்த ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் தான் ஆதிக்கம் செலுத்துவதாக கூறி வந்த நிலையில் தற்போது தன்னுடைய பந்துவீச்சு மூலம் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி மிட்செல் ஸ்டார்க் சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் பர்பிள் கேப்பை கைப்பற்றி இருக்கிறார். மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சன்ரைசர்ஸ் தடுமாறியது. இதேபோன்று குல்தீப் யாதவ் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Story first published: Sunday, March 30, 2025, 17:37 [IST]
Other articles published on Mar 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+