Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: யாருமே எதிர்பார்க்கல! நெஹ்ரா வைத்த ட்விஸ்ட்.. SRH சோலியை முடித்த பார்ட்னர்ஷிப்

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் யாருமே எதிர்பாராத ஒரு விஷயத்தை குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா செய்தார். அது இந்த போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையையும் ஏற்படுத்தியது. வாஷிங்டன் சுந்தர் ஒரு பௌலிங் ஆல்ரவுண்டராகவே அறியப்படுகிறார்.

ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனில் இடம் பிடித்தும் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை. அதேசமயம் பேட்டிங்கில் நான்காம் வரிசையில் அவர் களமிறக்கப்பட்டார். அதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

IPL 2025 SRH vs GT Ashish Nehra s Surprise Move is the turning point Washington Sundar Bats at No 4

வாஷிங்டன் சுந்தர் எப்போதும் பேட்டிங்கில் பின்வரிசையில் தான் பேட்டிங் செய்வார். ஆறு அல்லது ஏழாவது வரிசையில் தான் பேட்டிங் செய்வார். ஆனால், இந்த முறை நான்காம் வரிசையில் இறங்கியது ஆச்சரியமாக இருந்தது. அதுவும் 154 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 16 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் ஆடுகளத்துக்கு வந்தார்.

அப்போது கேப்டன் சுப்மன் கில் மறுபுறம் ஆடி வந்தார். வந்தவுடன் பந்துகளை வீணடிக்காத வாஷிங்டன் சுந்தர் ஆறாவது ஓவரில் அதிரடியாக 20 ரன்களை விளாசினார். மறுபுறம் நிதானமாக ஆடிய சுப்மன் கில் சீரான இடைவெளியில் பவுண்டரிகளை அடித்தார். ஒரு கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் 29 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அப்போது சுப்மன் கில் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 90 ரன்களை சேர்த்திருந்தனர். அங்கேயே போட்டி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சாதகமாக மாறிவிட்டது. அதன் பிறகு சுப்மன் கில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 61 ரன்கள் சேர்த்தார்.

சுப்மன் கில் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் கூட்டணி இந்த போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. வாஷிங்டன் சுந்தர் நான்காம் வரிசையில் இறங்குவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. வாஷிங்டன் சுந்தர் சென்றவுடன் ரூதர்போர்டு அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 16 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார்.

இதை அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி 16.4 ஓவர்களில் வெற்றி பெற்றது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. ஹைதராபாத் அணி தான் ஆடிய 5 போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Story first published: Monday, April 7, 2025, 8:27 [IST]
Other articles published on Apr 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+