Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

LSG vs SRH: என் குரு தோனி சொல்லி தந்த பாடம்.. வெற்றியால் நிம்மதியாக இருக்கிறது.. ரிஷப் பண்ட் கருத்து

ஐதராபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணி தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஏழாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 190 ரன்களில் ஆட்டமிழக்க, லக்னோ அணி இந்த இலக்கை 16 புள்ளி ஒரு ஓவரில் எல்லாம் சேஸ் செய்தது.

இதனை அடுத்து வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், தமது குரு தோனி சொல்லித் தந்த பாடத்தை பின்பற்றியதாக தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், "இந்த வெற்றி நிச்சயம் எனக்கு நிம்மதியை கொடுத்திருக்கிறது."

Rishabh Pant

"நாங்கள் எப்போதும் ஒரு அணியாக ஒருங்கிணைந்து பயிற்சியை சரியாக செய்ய வேண்டும் என்பது குறித்து தான் யோசிப்போம். நாங்கள் வெற்றி பெற்ற பிறகு பெரியதாக கொண்டாடுவதுமில்லை. தோல்வி அடைந்த பிறகு தோற்று விட்டோமே என்று சோகத்திலும் இருப்பதில்லை. நாங்கள் ஒரு தருணத்தில் ஒரு போட்டி என்ற முடிவில் தான் விளையாடி வருகிறோம்."

"என்னுடைய குரு சொல்வதை தான் பின்பற்றி வருகின்றேன். எது நம் கையில் இல்லையோ, அது குறித்து கவனம் செலுத்த தேவையில்லை. எது நமது கையில் இருக்கிறதோ அதில் கவனம் செலுத்தினால் போதும். தற்போது ஆவேஷ் கான் அபாரமாக பந்து வீசி வருகிறார். சர்துல் தாக்கூர் விக்கெட்டுகளை எடுத்து வருகிறார். நாங்கள் நிக்கோலஸ் பூரானுக்கு முழு சுதந்திரம் அளித்திருக்கின்றோம்."

"இந்த முழு சுதந்திரம் மூலம் வீரர்கள் தங்களுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடி வருகிறார்கள். நான் எனது அணி வீரர்களிடம் இதை தான் சொல்கின்றேன். களத்திற்கு சென்று உங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் என்று கூறுவேன். இன்றைய ஆட்டத்தில் நிக்கோலஸ் பூரான் பிரமாதமாக விளையாடினார். அனைவரும் இந்த தொடருக்காக நல்ல முறையில் தயாராகி வருகிறோம்."

"பேட்டிங் வரிசையில் பொருத்தவரை ஒருவர் அதிரடியாக ஆட வேண்டும் என்று நாங்கள் சிலருக்கு பொறுப்புகளை வழங்குகின்றோம். அவர்களும் அபாரமாக விளையாடுகிறார்கள். பிரின்ஸ் யாதவ் நல்ல முறையில் பந்துவீசி வருகிறார்.இது எங்கள் அணிக்கு நல்ல விஷயமாக பார்க்கிறேன்" என்று நிக்கோலஸ் கூறியுள்ளார்.

Story first published: Thursday, March 27, 2025, 23:54 [IST]
Other articles published on Mar 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+