Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SRH vs LSG: என்ன இது.. இஷான் கிஷன் செய்த செயல்.. உறைந்து போன சன்ரைசர்ஸ் ரசிகர்கள்.. என்ன நடந்தது?

ஹைதராபாத்: 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்று இருக்கும் இஷான் கிஷன், தான் சந்தித்த முதல் பந்திலேயே பெரும் ஏமாற்றம் அளித்தார். கடந்த போட்டியில் 44 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்திருந்த அவர், அதற்கு அடுத்த போட்டியிலேயே ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இஷான் கிஷன் பெரிய அளவில் ரன் குவிப்பார், அதிரடியாக ஆடுவார், சிக்ஸர்களை விளாசுவார் என ஆவலாக காத்திருந்த ரசிகர்களுக்கு அவரது விக்கெட் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய 2025 ஐபிஎல் தொடரின் ஏழாவது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

IPL 2025 SRH vs LSG Ishan Kishan s Duck Out SRH Fans not happy

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான அபிஷேக் ஷர்மா 6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து மூன்றாவது ஓவரில் ஆட்டம் இழந்தார்.

அதற்கு அடுத்த பந்திலேயே களத்துக்கு வந்த இஷான் கிஷன் பந்தை எட்ஜ் செய்து விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார் இஷான் கிஷன். அதைப் பார்த்த சன்ரைசர்ஸ் ரசிகர்கள் நம்ப முடியாமல் உறைந்து போனார்கள்.

மூன்றாவது ஓவரை வீசிய ஷர்துல் தாக்கூர் அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் என இரண்டு விக்கெட்களை வீழ்த்தி லக்னோ அணிக்கு திருப்பத்தை அளித்தார். இஷான் கிஷன் சதம் அடிக்கவில்லை என்றாலும் பத்து அல்லது இருபது ரன்கள் அடித்திருந்தாலும் சொல்லும்படி இருந்திருக்கும். ஆனால், ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தது அவர் மீதான நம்பகத்தன்மையை குறைத்து இருக்கிறது.

செய்தி சுருக்கம்:

  • இஷான் கிஷன் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
  • கடந்த போட்டியில் அவர் சதம் அடித்திருந்தார்.
  • லக்னோ அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • ஷர்துல் தாக்கூர் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.
  • இஷான் கிஷன் ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Story first published: Thursday, March 27, 2025, 20:24 [IST]
Other articles published on Mar 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+