Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: டாசின் போது இரங்கல் தெரிவித்த ஹர்திக், கம்மின்ஸ்.. ஷமி இன்றைய ஆட்டத்தில் இல்லையா?

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் 41வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத்தில் மோதுகிறது. இந்த அணிகள் கடந்த முறை மும்பையில் மோதியபோது 300 ரன்கள் அடிக்கும் என ஸ்டெயின் கூறியதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் சன்ரைசர்ஸ் அணி 180 ரன்ளை கூட தொடமுடியாமல் சுருண்டது. இந்த நிலையில் இன்றாவது ரசிகர்களுக்கு வாண வேடிக்கையை சன்ரைசர்ஸ் வீரர்கள் காட்டுவார்களா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் டாசின் போது பேசிய இரு கேப்டன்களும் காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

SRH vs MI

முதலில் பேசிய ஹர்திக் பாண்டியா, நான் டாஸ் குறித்து பேசுவதற்கு முன்பு முதலில் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். ஒரு அணியாக நாங்கள் இந்த தாக்குதலுக்கு எங்களுடைய கண்டனத்தை பதிவு செய்கின்றோம்.

இன்றைய ஆட்டத்தைப் பொறுத்தவரை நாங்கள் முதலில் பந்து வீசப் போகின்றோம். ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கின்றேன். எங்கள் அணியில் அஸ்வினிக்கு பதில் விக்னேஷ் புத்தூர் களமிறங்குகிறார். எங்களுடைய திட்டத்தை சரியாக செயல்படுத்தினாலே போதும் என நினைக்கின்றேன்.

போட்டியை சிம்பிளாக எடுத்துக் கொண்டு சரியான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று ஹர்திக் பாண்டியா கூறினார். இதனை தொடர்ந்து பேசிய பாட் கம்மின்ஸ், காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் எங்கள் இதயத்தை சுக்கு நூறாக உடைத்து இருக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறினார்.

இதை தொடர்ந்து பேசி அவர், இன்றைய ஆட்டத்தில் சமி இம்பேக்ட் வீரர் லிஸ்டில் இருக்கின்றார். இந்த ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் நல்ல முறையில் கிரிக்கெட் விளையாடி வருகின்றோம். இன்றைய போட்டியில் வெற்றி பெற முயற்சி செய்வோம் என்று கூறினார்.

Story first published: Wednesday, April 23, 2025, 19:29 [IST]
Other articles published on Apr 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+