சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி அணியின் பயிற்சியாளராக ஹேமாக் பதானி செயல்படுகிறார். டெல்லி அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கின்றது. ஹேமங் பதானி ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக செயல்பட போகிறார் என்ற செய்தி வெளிவந்தவுடன் பலரும் இதனை விமர்சனம் செய்தார்கள்.
ஆனால் அனைவரையும் வாயையும் அடைக்கும் வகையில் ஹேமாங் பதானில் தற்போது சிறப்பாக பணியை வழிநடத்தி வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், ஐபிஎல் தொடரில் உள்ள ஐபிஎல் அணிகள் இந்தியர்களை மட்டும் தான் பயிற்சியாளராக போடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஆன பிளமிங்கை அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர்ழ் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக பிளமிங் இருக்கிறார். சிஎஸ்கே 5 கோப்பையை வென்றிருக்கிறது என்று அனைவரும் பாராட்டுகிறார்கள்.
ஆனால் நான் சொல்வேன் பிளமிங்கால் சிஎஸ்கே அணி வென்றது கிடையாது. தோனி அணியில் இருப்பதால்தான் சிஎஸ்கே வெற்றி பெற்று வருகிறது. பிளமிங் மட்டும் அணியை பார்த்துக் கொண்டிருந்தால் நிச்சயம் சிஎஸ்கே அணி இவ்வளவு கோப்பையை வென்றிருக்காது. பிளமிங் ஐபிஎல் தொடரில் மட்டுமல்ல அமெரிக்காவில் நடைபெற்று வரும் எம்எல்சி தொடர், தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி 20 தொடர் போன்றவற்றில் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார்.
இந்த தொடரில் எல்லாம் ஒரு முறையாவது அவர் கோச்சிங் செய்த அணி கோப்பையை வென்றிருக்கிறதா? பிளமிங் பயிற்சியாளராக இருக்கும் அணி எதுவும் பெரிய அளவு சாதித்தது கிடையாது. இதனால் பிளெமிங் ஒரு நல்ல பயிற்சியாளர் என்று சொன்னால் நான் அதனை ஒப்புக் கொள்ள மாட்டேன். இந்திய பிரீமியர் லீக் தொடரில் உள்ள அணிகளுக்கு இந்தியர்களையே பயிற்சியாளராக நியமியுங்கள். அப்போதுதான் ஐபிஎல் தொடர் மேன்மேலும் வளரும் என்று ஹேமாங் பதனி தெரிவித்துள்ளார். ஒரு அணியின் பயிற்சியாளராக இருந்துவிட்டு மற்றொரு அணியின் பயிற்சியாளரை வெளிப்படையாக ஹேமாங் பதானி விமர்சித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.