14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ரொம்ப தூக்கி வச்சி கொண்டாடாதீங்க.. கவாஸ்கர் அறிவுரை
மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 14 வயது ஆன வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளின் சதம் விளாசி அசத்தினார். இதனால் ஒரே இரவில் கிரிக்கெட்டில் புதிய நட்சத்திரமாக வைபவ் உருவாகி இருக்கிறார்.
இதனால் வைபோவை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், வைபவை ரொம்ப தூக்கி கொண்டாடி அவருக்கு தேவையில்லாத அழுத்தத்தை கொடுக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கி இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், வைபவ் ஏலத்திற்குள் நுழைந்த போது அவர் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இளையருக்கான டெஸ்ட் போட்டியில் நல்ல வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவே அவர் சதம் அடித்திருந்தார். அதுவும் 13 வயதில் இந்த ரெக்கார்டு அவர் நிகழ்த்தி இருந்தார். அவருடைய திறமை என்னவென்று நம் அனைவருக்கும் புரிந்து இருக்கும்.
எனவே அங்கிருந்து அவர் மேலே நோக்கி தான் செல்வார் இது அதே சமயம் வைபோவை தேவையில்லாமல் ஒரே நாளில் தூக்கி ரொம்ப கொண்டாடக்கூடாது. மேலும் அவர் இளம் வயது என்பதால் தன்னுடைய விளையாட்டை மென்மேலும் அவர் வளர்த்துக் கொள்வார் என்று நினைக்கின்றேன். அதுவும் இல்லாமல் ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவானுடன் அமர்ந்து இன்னிங்சை எப்படி கட்டமைப்பது என்பதை அவர் கற்றுக் கொள்வார்.
இதன் மூலம் அவர் மென்மேலும் சிறந்த வீரராக மாற வாய்ப்பு இருக்கிறது. தாம் எதிர்கொண்ட முதல் பந்தலையே ஐபிஎல் தொடரில் சிக்சர் அடித்திருக்கிறார். தற்போது அதிரடி வீரர் என்ற பெயரை வாங்கி விட்டதால், தொடர்ந்து அனைத்துப் போட்டிகளிலும் அந்த பெயரை காப்பாற்ற வேண்டும் என்று அவர் நினைக்கக் கூடாது.
இதன் மூலம் அனுபவம் வாய்ந்த பவுலர்கள் இந்த வீரர் சிக்ஸர் அடிக்கத்தான் முயற்சி செய்வார். எனவே நாம் அதற்கு தகுந்த மாதிரி பந்து வீசி அவருடைய விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கத் தொடங்கியுள்ளார்கள். இதனால் வைபவ், தனது பேட்டிங் குறித்து கவலைப்பட தொடங்கி விடுவார் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications