Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே அணி இந்த விசயத்தில் ரொம்ப மோசம்.. மற்ற அணிகளை பார்த்து கத்துக்குங்க.. சுனில் கவாஸ்கர்

சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் பிளே ஆஃப் சுற்றி வாய்ப்பை ஏற்கனவே சிஎஸ்கே அணி இழந்துவிட்டது. இந்த சூழலில் மற்ற அணிகள் எல்லாம் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகின்றனர்.

ஆனால் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்த எந்த வீரர்களும் இம்முறை சிறப்பாக விளையாடவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், இளம் வீரர்களை தேடி கண்டுபிடிக்கும் ஸ்கவுட்டிங் சிஎஸ்கே அணியில் சிறப்பாக செயல்படாதது இம்முறை தோல்விக்கு காரணம் என்று குற்றச்சாட்டி இருக்கிறார்.

CSK

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் மற்ற அணிகள் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு புதிய இளம் வீரர்களை தேர்வு செய்து இருக்கிறார்கள். ஆனால் சிஎஸ்கே அணியின் ஸ்கவுட்டிங் டீம் அப்படி எந்த ஒரு பணியையும் செய்யவில்லை. நாடு தழுவிய டி20 லீக் தொடரில் பங்கேற்கும் வீரர்களை மட்டும் தேர்வு செய்தால் போதாது.

அந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களை நம்பி சர்வதேச தரத்தில் இருக்கும். ஐபிஎல் தொடரில் சேர்க்கக்கூடாது. ஏனென்றால் மாநில அளவில் நடைபெறும் டி20 தொடரில் பந்துவீச்சு என்பது மிகவும் மோசமானதாக இருக்கும். மேலும் மைதானமும் சிறிய அளவில் இருக்கும். இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஐபிஎல் தொடர்கள் தடுமாற அதிக வாய்ப்பு இருக்கிறது.

எனவே சிஎஸ்கே அணி ஏலத்தில் சரியாக செயல்பட்டு தங்களுடைய யுக்திகளை சரியான முறையில் கட்டமைக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இனி ஐபிஎல் தொடரில் வெற்றி பெற முடியும். இதேபோன்று தோனி தன்னுடைய சுயநலத்திற்காக ஓய்வு பெறாமல் இல்லை. மாறாக சிஎஸ்கே அணியின் நன்மைக்காக தான் அவர் விளையாடுகிறார்.

தற்போது சிஎஸ்கே அணி எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்த்து தான் அவருடைய ஓய்வு முடிவை எடுப்பார் என்று நினைக்கின்றேன் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.நடப்பு சீசனில் 10 இன்னிங்ஸில் விளையாடியுள்ள தோனி மொத்தமாக 151 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவர்களின் சராசரி 25 ஆகும் 148 என்ற அளவில் இருக்கிறது.

Story first published: Saturday, May 3, 2025, 19:07 [IST]
Other articles published on May 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+