Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக சாதனை படைத்த சுனில் நரைன்.. எந்த பவுலரும் செய்யாத டி20 ரெக்கார்டு.. ஒரே அணிக்காக 200 விக்கெட்

கொல்கத்தா: உலகிலேயே எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத மாபெரும் சாதனையைச் செய்திருக்கிறார் சுனில் நரைன். அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 210 டி20 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் உலகிலேயே ஒரே கிரிக்கெட் அணிக்காக அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற மாபெரும் சாதனையைப் படைத்திருக்கிறார். மேலும், ஐபிஎல் வரலாற்றிலும் இதுவே அதிகமாகும்.

IPL 2025 Sunil Narine registers huge world T20 Record involving KKR

ஒரே அணிக்காக அதிக டி20 விக்கெட்டுகள் வீழ்த்திய உலக சாதனை பட்டியல் -

தற்போது சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 210 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக அளவில் ஒரே அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியல் இதோ:

  1. சுனில் நரைன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 210 விக்கெட்டுகள்

  2. சமித் படேல் - நாட்டிங்ஹாம்ஷயர் - 208 விக்கெட்டுகள்

  3. கிறிஸ் வுட் - ஹாம்ப்ஷயர் - 199 விக்கெட்டுகள்

  4. லசித் மலிங்கா - மும்பை இந்தியன்ஸ் - 195 விக்கெட்டுகள்

  5. டேவிட் பெயின் - க்ளௌசெஸ்டர்ஷயர் - 193 விக்கெட்டுகள்

நேற்று நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் டிரெவிஸ் ஹெட் ஆகியோரின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். அந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 168 ரன்கள் மட்டும் எடுத்து சுமார் 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

இதில் சுனில் நரைன் மட்டுமே ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் நான்கு ஓவர்களில் 42 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மேலும் பேட்டிங்கில் 16 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தார். அந்த அணியிலேயே 20 ரன்கள் தாண்டி ரன் குவித்த வீரர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் இருந்தது இவர் மட்டுமே.

சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 2012 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். அப்போதுதான் அவர் ஐபிஎல் தொடரில் முதன்முதலாக இடம் பிடித்தார். அப்போது முதல் அந்த அணியிலேயே அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். அந்த அணியின் மூன்று ஐபிஎல் கோப்பை வெற்றிகளிலும் அவருக்கு பங்கு உள்ளது. மேலும், ஐபிஎல் வரலாற்றில் மூன்று முறை அதிக மதிப்புமிக்க வீரர் விருதை அவர் வென்றுள்ளார்.

பல ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க வீரராகவும் அவர் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அவர் 12 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மேலும் 246 ரன்களையும் சேர்த்து இருக்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அவருக்கு சராசரியாகவே அமைந்தது.

Story first published: Monday, May 26, 2025, 7:48 [IST]
Other articles published on May 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+