For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“சன்ரைசர்ஸ் டீமை விட்டு வெளியே வந்துடு”.. தூண்டில் போட்ட ஐபிஎல் அணிகள்.. எஸ்கேப் ஆன நிதிஷ் குமார்

ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று இருக்கும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி, தன்னை பிற ஐபிஎல் அணிகள் ஏலத்தில் பங்கேற்குமாறு ஆசை காட்டியதாகவும், தான் சன்ரைசர்ஸ் அணி தான் முக்கியம் என அணியை விட்டு செல்ல மறுத்ததாகவும் உண்மையை வெளியே கூறி இருக்கிறார்.

2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கண்டுபிடிப்பாக வந்தார் நிதிஷ்குமார் ரெட்டி. வேகப்பந்து வீச்சையும், அதிரடி பேட்டிங்கையும் கொண்டவராக இருந்தார். அந்த அணிக்காக 2024 ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் 303 ரன்களை சேர்த்தார். அவரது பேட்டிங் சராசரி 33.67 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 142.92 ஆகவும் இருந்தது. அவர் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

IPL 2025 Sunrisers Hyderabad All-rounder Nitish Kumar Reddy Reveals Other IPL Teams Wanted Him in Auction

இதை அடுத்து அவருக்கு இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. அவர் இந்திய அணிக்காக இதுவரை 4 சர்வதேச டி20 போட்டிகளிலும், 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடித்தார்.

இந்த நிலையில் அப்போது நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் நிதிஷ்குமார் ரெட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவரை சன்ரைசர்ஸ் அணி தக்க வைத்தது. ஆனால் ஏலத்தில் பங்கேற்றால் தாங்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதாக பிற ஐபிஎல் அணிகள் ஆசை காட்டியதாகவும், ஆனால் தான் தன் மீது நம்பிக்கை வைத்த சன்ரைசர்ஸ் அணியிலேயே இருக்க முடிவு செய்ததாகவும் தற்போது ஒரு பேட்டியில் சூசகமாக கூறி இருக்கிறார் நிதிஷ்குமார் ரெட்டி.

இது பற்றி நிதிஷ் குமார் ரெட்டி பேசுகையில், "எனக்கு ஐபிஎல் ஏலத்தின் போது சில வாய்ப்புகள் வந்தன. ஆனால், நான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை விட்டு வெளியேற விரும்பவில்லை. இது எனது வீடு போன்ற ஒரு அணி. நான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடி ஐபிஎல் கோப்பையை வெல்ல விரும்புகிறேன். அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்தார்கள். நான் அந்த அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என நினைக்கிறேன். ஏலத்தில் என்னை பங்கேற்க வைக்க வேண்டுமென சில அணிகள் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் நான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடுவதையே விரும்பினேன்" என்றார்.

Take a Poll

செய்தி சுருக்கம்:

  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி, ஐபிஎல் ஏலத்தின் போது பிற அணிகள் தன்னை அணுகியதாக கூறியுள்ளார்.
  • அதிக விலை கொடுத்து வாங்குவதாக உறுதியளித்தும் தான் சன்ரைசர்ஸ் அணியிலேயே நீடிக்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது வீடு போன்றது என்றும், அந்த அணிக்காக கோப்பை வெல்ல விரும்புவதாகவும் அவர் கூறினார்.
Story first published: Friday, March 21, 2025, 14:56 [IST]
Other articles published on Mar 21, 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+