For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025- ஐபிஎல் வரலாற்றை புரட்டிப் போட்ட காவ்யா மாறன்.. மிரண்டு போன மற்ற அணிகள்.. கிளாசன் சம்பளம்!

ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் யாரும் எதிர்பாராத வகையில் மிக அதிகபட்ச தொகைக்கு ஒரு வீரரை தக்க வைத்து இருக்கிறார். அதுவே ஐபிஎல் வரலாற்றில் தக்க வைக்கப்பட்ட வீரர் ஒருவருக்கு அளிக்கப்படும் அதிகபட்ச சம்பளம் ஆகும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிரடி தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசன் 23 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டு இருக்கிறார். இதுவே ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரரை தக்க வைக்க அளிக்கப்படும் அதிகபட்ச சம்பளம் ஆகும்.

ipl 2025 chennai super kings cricket

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பாட் கம்மின்ஸ், அபிஷேக் ஷர்மா, நிதிஷ் ரெட்டி. ஹென்ரிச் கிளாஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர் இதில் அதிகபட்சமாக கிளாசன் 23 கோடிக்கு தக்க வைக்கப்பட்டு இருக்கிறார். பாட் கம்மின்ஸ் 18 கோடி ரூபாய்க்கும், அபிஷேக் சர்மா 14 கோடி ரூபாய்க்கும், ட்ராவிஸ் ஹெட் 14 கோடி ரூபாய்க்கும், நிதிஷ் ரெட்டி 6 கோடி ரூபாய்க்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னணி வீரரும், சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான ஐடன் மார்கிரம் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அதே போல புவனேஸ்வர் குமார், மார்கோ ஜான்சென். நடராஜன், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், மயங்க் அகர்வால், கிளென் பிலிப்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் பலரை சன்ரைசர்ஸ் அணி விடுவித்து இருக்கிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்க வைத்த வீரர்கள் பட்டியல் -

ஹென்ரிச் கிளாசன் (23 கோடி), பாட் கம்மின்ஸ் (18 கோடி), அபிஷேக் சர்மா (14 கோடி), டிராவிஸ் ஹெட் (14 கோடி), நிதிஷ் குமார் ரெட்டி (6 கோடி)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விடுவித்த வீரர்கள் பட்டியல் -

மயங்க் அகர்வால் , ராகுல் திரிபாதி, அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார் , டி நடராஜன், உம்ரான் மாலிக், அன்மோல்பிரீத் சிங், ஷாபாஸ் அகமது, உபேந்திர யாதவ், சன்வீர் சிங், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனத்கட் , ஆகாஷ் சிங், ஜதவேத் சுப்ரமண்யம், ஐடன் மார்க்ராம் , க்ளென் பிலிப்ஸ், ஃபசல்ஹக் ஃபரூக்கி, மார்கோ ஜான்சன், வனிந்து ஹசரங்கா, விஜயகாந்த் வியாஸ்காந்த்

Story first published: Thursday, October 31, 2024, 18:08 [IST]
Other articles published on Oct 31, 2024
English summary
IPL 2025 : Sunrisers Hyderabad - Kavya Maran retains Klassen at 23 crores
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+