Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: அதிக டாட் பந்துகளை வீசிய டாப் 10 பவுலர்கள் யார்?

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வழக்கம் போல் பேட்ஸ்மேன்களுக்கு விருந்தாக அமையும் நிலையில், பவுலர்கள் டாட் பால் வீசினால் அதற்கு சிறப்பு பரிசும் இம்முறை ஒவ்வொரு போட்டியிலும் பிசிசிஐ வழங்கி வருகிறது. மேலும் ஒரு டாட் பால்களை வீசினால் மரம் வளர்க்கும் நல்ல விஷயத்தையும் இந்திய கிரிக்கெட் வாரியம் செய்து வருகிறது.

அந்த வகையில் நடப்பு தொடரில் அதிக டாட் பால்களை வீசிய டாப் 10 பவுலர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பவர் சிஎஸ்கே வீரர் கலீல் அகமது தான். கலீல் அகமத் 11 போட்டிகளில் விளையாடி இதுவரை 113 டாட் பால்களை வீசி இருக்கிறார்.

Most Dot Balls

இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளார். இவர் 12 போட்டிகளில் விளையாடி 110 டாட் பந்துகளை வீசி இருக்கிறார். மூன்றாவது இடத்தில் குஜராத் அணியின் முகமது சிராஜ் உள்ளார். இவர் 10 போட்டிகளில் விளையாடி 107 டாட் பால்களை வீசி இருக்கிறார். நான்காவது இடத்தில் ஆர்சிபி வீரர் ஹேசல்வுட் இருக்கிறார். இவர் பத்து போட்டிகளில் விளையாடி 103 டாட் பால்களை வீசி இருக்கிறார்.

ஐந்தாம் இடத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி இருக்கிறார். இவர் 11 போட்டிகளில் 103 டாட் பந்துகளை வீசி இருக்கிறார். ஆறாவது இடத்தில் குஜராத் அணியின் பிரசித் கிருஷ்ணா இருக்கின்றார். இவர் 10 போட்டிகளில் விளையாடி 102 டாட் பால்களை வீசி இருக்கிறார். ஏழாவது இடத்தில் பஞ்சாப் அணியில் ஆர்ஸ்தீப் சிங் இருக்கிறார். இவர் 11 போட்டிகளில் விளையாடி 96 டாட் பந்துகளை வீசி இருக்கிறார். எட்டாம் இடத்தில் புவனேஸ்வர் குமார் இருக்கின்றார்.

ஆர்சிபி அணிக்காக விளையாடும் இவர் பத்து போட்டிகள் விளையாடி 92 பந்துகளை வீசி இருக்கிறார். ஒன்பதாவது இடத்தில் சன்ரைசர்ஸ் வீரர் பாட் கம்மின்ஸ் உள்ளார். இவர் 11 போட்டிகளில் விளையாடி 92 டாட் பந்துகளை வீசி இருக்கிறார். பத்தாவது இடத்தில் கே கே ஆர் அணி வீரர் ஹர்ஷித் ராணா இருக்கின்றார். இதில் அவர் 11 போட்டிகளில் விளையாடி 91 டாட் பால்களை வீசி இருக்கின்றார்.

இந்த டாப் 10 பட்டியலில் 9வது இடத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் இருக்கிறார்கள்.ஒரே ஒரு வீரர் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி மட்டும்தான் ஐந்தாம் இடத்தில் சுழற் பந்துவீச்சாளராக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, May 6, 2025, 19:01 [IST]
Other articles published on May 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+