For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 10 வீரர்கள் பட்டியல்

அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றது. இறுதிப் போட்டியில் இதுவரை கோப்பையை வெல்லாத பஞ்சாப் அணியும், ஆர்சிபி அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இதில் ஆர்சிபி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 18 ஆண்டுகளில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட் எடுத்த டாப் டென் வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன் இருக்கிறார். இவர் 15 போட்டிகளில் 759 ரன்கள் அடித்திருக்கிறார்.

IPL 2025 stats

இதில் ஆறு அரைசதம்,ஒரு சதம் அடங்கும். இரண்டாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூரியகுமார் இருக்கிறார். இவர் 16 போட்டிகளில் 717 ரன்கள் அடித்திருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஆர்சிபி அணியின் விராட் கோலி இருக்கிறார். கோலி 657 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் எட்டு அரை சதம் அடங்கும். 650 ரன்கள் எடுத்து சுப்மன் கில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

இவரும் ஆறு அரை சதம் அடித்துள்ளார். ஐந்தாவது இடத்தில் லக்னோ அணியின் மிட்செல் மார்ஸ் இருக்கின்றார். இவர் 13 போட்டிகளில் 627 ரன்கள் அடித்திருக்கிறார். ஆறாவது இடத்தில் உள்ள ஸ்ரேயாஸ் ஐயர், 17 போட்டியில் 604 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 6அரை சதம் அடங்கும். ஏழாவது இடத்தில் ஜெய்ஸ்வால் இருக்கின்றார்.
இவர் 14 போட்டிகளில் 559 ரன்கள் அடித்திருக்கிறார்.

எட்டாவது இடத்தில் பஞ்சாப் வீரர் பிராப்சிம்ரன் சிங் இருக்கின்றார். இவர் 17 போட்டியில் 549 ரன்கள் அடித்துள்ளார்.ஒன்பதாவது இடத்தில் கே.எல் ராகுல் இருக்கின்றார். இவர் 13 போட்டிகளில் 539 ரன்கள் அடித்துள்ளார். பத்தாவது இடத்தில் ஜாஸ் பட்லர். இருக்கின்றார் இவர் 14 போட்டிகளில் 538 ரன்கள் அடித்துள்ளார்.

இந்த பட்டியலில் முதல் 20 இடத்தில் எந்த ஒரு சிஎஸ்கே வீரரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பவுலர்களுக்கான பட்டியலில் 15 போட்டிகளில் 25 விக்கெட் வீழ்த்தி குஜராத் அணியின் பிரசித் கிருஷ்ணா முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் சிஎஸ்கே வீரர் நூர் அகமத் 14 போட்டிகளில் 24 விக்கெட் எடுத்து உள்ளார். ஆர்சிபி வீரர் ஹேசல்வுட் 12 போட்டிகளில் 22 விக்கெட்டுகளும், நான்காம் இடத்தில் மும்பை அணியின் ட்ரெண்ட் பவுல்ட் 16 போட்டியில் 22 விக்கெட்டுகளும், பஞ்சாப் அணியின் ஆர்ஸ்தீப் சிங் 17 போட்டிகளில் 21 விக்கெட் எடுத்து 5வது இடத்தில் உள்ளனர்.

தமிழக வீரர் சாய் கிஷோர் குஜராத் அணிக்காக 19 விக்கெட்களை வீழ்த்தி ஆறாம் இடத்தில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி நட்சத்திர வீரர் பும்ரா 18 விக்கெட்டு களுடன் ஏழாம் இடத்திலும், 17 விக்கெட்களுடன் மற்றொரு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி எட்டாவது இடத்திலும் உள்ளனர். குர்னல் பாண்டியா 17 விக்கெட்டுகளுடன் ஒன்பதாவது இடத்திலும், புவனேஸ்வர் குமார் 17 விக்கெட் உடன் பத்தாவது இடத்திலும் உள்ளனர். முதல் பத்து இடத்தில் மூன்று ஆர் சி பி வீரர்கள் இருப்பது அந்த அணியின் பந்துவீச்சு முன்னேறி இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

Story first published: Wednesday, June 4, 2025, 16:53 [IST]
Other articles published on Jun 4, 2025
English summary
IPL 2025 - Top 10 Players of Most runs and Most wickets in this season
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+