IPL 2025: கோலியிடமிருந்து பறிபோகுமா ஆரஞ்சு தொப்பி.. டாப் 5 ரன்கள், விக்கெட் எடுத்தவர்கள் யார்?
மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் தற்போது 46 போட்டிகள் முடிவடைந்து இருக்கிறது. இன்னும் 24 லீக் ஆட்டம் எஞ்சி இருக்கிறது, எந்த அணி செல்ல போகிறது என்ற போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் 46 போட்டிகள் முடிவடைந்த நிலையில் எந்த வீரர்கள் அதிக ரன்கள் அடித்து இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.
10 போட்டியில் விளையாடியுள்ள விராட் கோலி 443 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஆறு அரை சதம் அடங்கும். இதன் மூலம் விராட் கோலி தற்போது ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றி இருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் சூரியகுமார் இருக்கிறார். அவர் பத்து போட்டிகளில் 427 ரன்கள் அடித்திருக்கிறார்.

மூன்றாம் இடத்தில் சாய் சுதர்சன் இருக்கிறார். அவர் எட்டு போட்டிகளில் 417 ரன்கள் அடித்துள்ளார். சாய் சுதர்சன் இன்று 27 ரன்கள் அடித்தால் விராட் கோலியின் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி விடுவார். நான்காவது இடத்தில் நிக்கோலஸ் பூரான் இருக்கின்றார். அவர் பத்து போட்டியில் விளையாடி 404 ரன்கள் அடித்துள்ளார்.
ஐந்தாம் இடத்தில் லக்னோ வீரர் மிட்செல் மார்ஸ் இருக்கிறார். இவர் 9 போட்டியில் விளையாடி 378 ரன்கள் அடித்துள்ளார். இந்த நிலையில் பவுலர்களின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். முதலிடத்தில் ஆர்சிபி வீரர் ஹேசல்வுட் இருக்கிறார். இவர் 10 போட்டியில் விளையாடி 18 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இரண்டாம் இடத்தில் பிரசித் கிருஷ்ணா இருக்கின்றார். இவர் எட்டு போட்டியில் விளையாடி 16 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
மூன்றாவது இடத்தில் சிஎஸ்கே வீரர் நூர் அகமது இருக்கின்றார். இவர் 9 போட்டியில் விளையாடி 14 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். நான்காம் இடத்தில் மும்பை வீரர் டிரெண்ட் பவுல்ட் இருக்கின்றார். இவர் பத்து போட்டியில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐந்தாவது இடத்தில் ஆர்சிபி வீரர் குர்னல் பாண்டியா இருக்கிறார் இவர் பத்துப் போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications