Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: யாருக்கு பா வயசாயிடுச்சி.. கடைசி 5 ஓவரில் அதிக ரன்கள்.. தோனி எந்த இடம்னு பாருங்க

மும்பை: 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளங்கும் தோனி இறுதி கட்டத்தில் மட்டும்தான் களமிறங்குகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இறுதி கட்டத்தில் களமிறங்கினாலும் அவர் பெரிய அளவு ரன்கள் குவிப்பதில்லை என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

இந்த சூழலில் ஐபிஎல் 2024 தொடக்கத்தில் இருந்து தற்போது வரை கடைசி ஐந்து ஓவர்களில் எந்த வீரர்கள் அதிக ரன்கள் அடித்திருக்கிறார்கள் என்ற பட்டியல் தற்போது வெளி வந்திருக்கிறது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 29 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

MS Dhoni

எனினும் இறுதியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை கௌரவமான இலக்கிற்கு கொண்டு சென்றார். டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் 36 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு சீசன் முதல் தற்போது வரை நடைபெற்று இருக்கும் போட்டிகளில் கடைசி ஐந்து ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் முதலிடத்தில் இருக்கின்றார்.

ஸ்டெப்ஸ் 382 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 240 என்று அளவில் இருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆர்சிபி வீரர் டிம் டேவிட் உள்ளார். டிம் டேவிட் கடைசி ஐந்து ஓவர்களில் 340 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 188 என்ற அளவில் இருக்கிறது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் 43 வயது வீரரான சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இருக்கின்றார்.

தோனி கடைசி ஐந்து ஓவர்களில் மொத்தமாக 309 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 188 என்ற அளவில் இருக்கின்றது. இந்தப் பட்டியலில் நான்காம் இடத்தில் சன்ரைசர்ஸ் வீரர் ஹென்றிச் கிளாசன் இருக்கின்றார். கிளாசன் கடைசியாக 5 ஓவர்களில் 293 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 212 ஆகும்.

இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ஷாசாங் சிங் இருக்கின்றார். அவர் கடைசி ஐந்து ஓவர்களில் 281 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 193 என்ற அளவில் இருக்கிறது. இந்த பட்டியலில் அனைவரும் இளம் வீரர்களாக உள்ள நிலையில் தோனி மட்டும்தான் சீனியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 5, 2025, 23:25 [IST]
Other articles published on May 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+