Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: சிஎஸ்கேவிடம் இருந்த ஒரே கவுரவமும் போச்சு.. அதிக ரன்கள், விக்கெட் டாப் 5 வீரர்கள் யார்?

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் தற்போது 40 போட்டிகள் முடிவடைந்து இருக்கிறது. இதன் முடிவு அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட் எடுத்த டாப் 5 வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் தமிழக வீரர் சாய் சுதர்சன் முதலிடத்தில் இருக்கின்றார்.

குஜராத் அணிக்காக 8 போட்டியில் விளையாடியுள்ள சாய் சுதர்சன் 417 ரன்களை அடித்திருக்கிறார். இதில் ஐந்து அரை சதம் அடங்கும். இதன் மூலம் சாய் சுதர்சன் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி இருக்கின்றார். இரண்டாவது இடத்தில் லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரான் உள்ளார்.

IPL stats

பூரான் 377 ரன்கள் அடித்து நான்கு அரை சதத்துடன் உள்ளார். மூன்றாவது இடத்தில் குஜராத் அணியின் ஜாஸ் பட்லர் இருக்கிறார். அவர் எட்டு போட்டியில் விளையாடி 356 ரன்ள் அடித்திருக்கிறார். இதில் மூன்று அரைசதம் அடங்கும். நான்காம் இடத்தில் லக்னோ வீரர் மிட்செல் மார்ஸ் இருக்கின்றார். அவர் 344 ரன்கள் அடித்து நான்கு அரை சதத்துடன் உள்ளார்.

ஐந்தாம் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூரியகுமார் யாதவ் இருக்கிறார். அவர் 333 ரன்கள் அடித்து இரண்டு அரை சதத்துடன் உள்ளார். இதேபோன்று பவுலர்களுக்கான அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சிஎஸ்கே விரட் நூர் அகமத் தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதன் மூலம் சிஎஸ்கேவிடம் இருந்த ஒரே கௌரவமான பர்பிள் தொப்பி தற்போது குஜராத் அணிக்கு சென்றிருக்கிறது.

எட்டு போட்டிகளில் விளையாடியுள்ள பிரசித் கிருஷ்ணா தற்போது 16 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். 8 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட் உடன் டெல்லி அணியின் குல்தீப் இரண்டாவது இடத்திலும், சிஎஸ்கே வீரர் நூர் அகமது 8 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட் வீழ்த்தி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

குஜராத் அணி வீரர் சாய் கிஷோர் 8 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட் வீழ்த்தி நான்காம் இடத்திலும் 8 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட் உடன் ஆர்சிபி வீரர் ஹேசல்வுட் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். டாப் ஐந்து இடத்தில் பேட்டிங்களும் பௌலிங்கிலும் குஜராத் அணி வீரர்கள் அதிக அளவு இருப்பதால்தான் தற்போது அந்த அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, April 23, 2025, 8:00 [IST]
Other articles published on Apr 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+