Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 -சிஎஸ்கே-க்கு திரும்ப வர டுபிளசிஸ்க்கு வாய்ப்பு.. ஆர்சிபி எடுக்க போகும் முடிவால் தல திட்டம்

சென்னை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி டுபிளசிசை தக்க வைக்காமல் விட்டுவிட்டால், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. டுபிளசிஸ்க்கு வயது 40 ஆகிறது.

இதனால் rcb அணி அவரை அடுத்த சீசனின் எடுக்காது என்று செய்திகள் வருகிறது. ராகுல், ஜாஸ் பட்லர் போன்ற வீரர்களை ஆர்சிபி அணி எடுக்கப் போகிறது என்று கூறப்படுகிறது. ஒருவேளை டுபிளசிசை ஆர் சி பி அணி எடுக்கவில்லை என்றால் சிஎஸ்கே அணி அவரை தட்டி தூக்கி விடும்.

IPL 2025 CSK Ruturaj Faf duplessis

இதற்கு காரணம் எப்போதுமே சிஎஸ்கே அணி வயதான வீரர்களை ஏலத்தில் எடுப்பது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. மேலும் 40 வயது ஆகிவிட்டாலும் டுபிளசிஸ் உடல் தகுதியுடன் சிறப்பாக இருக்கின்றார். மேலும் அமெரிக்காவில் நடைபெறும் தொடரிலும் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் தொடரிலும் சிஎஸ்கேவின் துணை அணிகளுக்கு அவர் கேப்டனாக சிறப்பாக விளையாடி வருகிறார்.

இதனால் வயதை காரணம் காட்டி சிஎஸ்கே அணி அவரை நிச்சயம் எடுக்காமல் விட்டு விடாது. அது மட்டும் இல்லாமல் தற்போது ருதுரஜ் நம்பர் மூன்றாவது வீரராக தான் களமிறங்குகிறார். இதனால் தொடக்க வீரராக கான்வே உடன் டுப்ளசிஸ் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணி டுபிளசிசை கண்டிப்பாக எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

ஒருவேளை டுபிளசிஸ் இனி தன்னால் விளையாட முடியாது என்ற முடிவு எடுத்தால் மட்டுமே அவர் சிஎஸ்கே அணியில் வீரராக இருக்க முடியாது. ஒருவேளை டுபிளசிஸ் ஓய்வு பெற்று விட்டால் அவரை தங்களது பயிற்சி குழுவில் இணைத்துக்கொள்ள சிஎஸ்கே நிச்சயம் ஆர்வம் காட்டும். டுபிளசிஸ் நல்ல பேட்ஸ்மேன் மட்டுமல்லாமல் நல்ல ஃபீல்டராகவும் இருப்பதால் அவருக்கு நிச்சயம் பயிற்சி குழுவில் இடம் கிடைக்கும்.

சிஎஸ்கே அணியின் சிறந்த சேவகன் ஆக விலங்கி வந்த டுபிளசிஸ், ஆர் சி பி அணிக்கு சென்றதும் இங்குள்ள பல ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் டுபிளசிஸ் மீண்டும் வருகிறார் என தெரிந்தால் நிச்சயம் சிஎஸ்கே ரசிகர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பார்கள். இது நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Wednesday, July 24, 2024, 7:30 [IST]
Other articles published on Jul 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+